கடைசி படத்தில் ராணுவ வீரராக நடித்துள்ள புனித் ராஜ்குமார்.!!

மறைந்த புனித் ராஜ்குமார் நடித்த கடைசி படத்தின் போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

கடைசி படத்தில் ராணுவ வீரராக நடித்துள்ள புனித் ராஜ்குமார்.!!

கன்னட சினிமாவின் முன்னணி நடிகர் புனித் ராஜ்குமார். கடந்த அக்டோபர் 29ஆம் தேதி மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார்.

புனித் ராஜ்குமார் கடைசியாக நடித்து வெளியான யுவரத்னா படத்தின் போஸ்டர் வெளியாகி உள்ளது. புனித் ராஜ்குமார் மரணம் அடைவதற்கு முன்பு கடைசியாக நடித்துள்ள படம் ஜேம்ஸ். இதனை சேத்தன் குமார் இயக்கியுள்ளார்.இதில் பிரியா ஆனந்த் அவருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். 

இப்படத்தில் முதல்முறையாக புனித் ராஜ்குமார் ராணுவ வீரராக நடித்திருக்கிறார். இதை முன்னிட்டு அவரை பெருமைபடுத்தும் விதமாக குடியரசு தினத்தன்று அவரின் ராணுவ வீரர் தோற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. அந்த படத்தின் போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.