சீரியல் நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்த தயாரிப்பு நிர்வாகி அதிரடி கைது....

மகராஷ்டிராவில் பிரபல மராத்தி தொலைக்காட்சி தொடரின் தயாரிப்பு நிர்வாகி தனக்கு பாலியல் தொல்லை தருவதாக நடிகை ஒருவர் அளித்த புகாரில் அவரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் மாரத்தி சின்னத்திரை உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சீரியல் நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்த தயாரிப்பு நிர்வாகி அதிரடி கைது....

மகராஷ்டிரா மாநிலத்தில் பிரபல மராத்தி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருவது 'சஹ்குடும்ப் சஹாபரிவார்' தொலைக்காட்சி தொடரில் துணை நடிகையான ஸ்வாதி பதாவே காவல்நிலையத்தில் பாலியல் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் தான் பணிபுரியும் நிகழ்ச்சியில் நந்திதா பட்கருக்கு டூப்பாக நடித்து வருகிறேன். நான் ஏற்கனவே பல நிகழ்ச்சிகளில் நடித்துள்ளேன். ஆனால் இந்த நிகழ்ச்சியில் மட்டும்தான் நான் ஒரு முண்ணனி நடிகைக்கு டூப்பாக நடிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. சில நேரத்தில் இந்த நிகழ்ச்சியின் சூட்டிங்கின்போது நந்திதா பட்கர் தாமதமாக வந்தால் அந்த சமயங்களில் அவரது கதா பாத்திரத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்தது.


இந்நிலையில் இந்நிகழ்ச்சியின் தயாரிப்பு நிர்வாகி என்னிடம் அணுகி, புனேயில் சூட்டிங் இருப்பது வசதியாக இருக்கிறதா எனக்கேட்டார். நான் அதற்கு ஆமாம் மிகவும் பிடித்திருக்கிறது என்றேன். பின்னர் சினிமாவில் நிறைய பேரை தெரியும் என்றும். நான் சம்மதித்தால் வாய்ப்புகள் வாங்கி தருவதாகவும் ஸ்வப்னில் என்னிடம் கூறினார். அப்படி பட வாய்ப்புகள் வேண்டுமென்றால் தனக்கு தேவையான ஒன்றை தரவேண்டும் என என்னிடம் கேட்டார். நான் அதற்கு பணம் தருகிறேன் என்றேன். ஆனால் அவர் பணம் வேண்டாம் என்றும் அவருடன் பாலியல் ரீதியாக உறவு கொள்ள வேண்டும் என்றும் கேட்டார். இதனால் நான் அதிர்ச்சி அடைந்தேன். நான் கிரைம் பட்ரோல் மற்றும் மராத்தி நிகழ்ச்சிகள் உட்பட பல இந்தி தொலைக்காட்சிகளில் நடித்துள்ளேன். ஆனால் இப்படி ஒரு அனுபவத்தை நான் எதிர்பார்க்கவில்லை. 

 ஸ்வப்னில் தன்னிடம் அணுகிய விதங்களை ஆதாரத்துடன் கோரேகான் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். இதையடுத்து போலீசார் ஸ்வப்னில் லோகாண்டே மீது வழக்குப் பதிந்து அவரை கைது செய்துள்ளனர். இது எனக்கு மகிழ்ச்சி என ஸ்வாதி பதாவே தெரிவித்தார். இந்நிகழ்ச்சியின் நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் தற்கொலைக்குத் தூண்டும் வகையில், பாலியல் தொல்லை தருவதாக மூத்த நடிகை அன்னபூர்ணா விட்டல் ஏற்கனவே குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.