பிரியங்கா சோப்ராவுக்கு விவாகரத்தா?  வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரியங்கா சோப்ரா !!...

பிரபல நடிகையான பிரியங்கா சோப்ரா இன்ஸ்டாகிராமில் தனது பெயருக்கு பின்னால் இருந்த கணவரின் பெயரை திடீரென நீக்கியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் பிரியங்கா சோப்ரா. 

பிரியங்கா சோப்ராவுக்கு விவாகரத்தா?  வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரியங்கா சோப்ரா !!...

சமீபத்தில் நடிகை சமந்தாவும்  தனது பெயருக்கு பின்னால் இருந்த தனது கணவரின் குடும்பப் பெயரான அக்கினேனியை நீக்கினார் அப்போதே ரசிகர்கள் மத்தியில்  அவர்கள் விவாகரத்து செய்ய போகிறார்களா என்ற கேள்வி எழுந்த நிலையில், விவாகரத்தையும் அறிவித்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தார்கள்.   

 நடிகை பிரியங்கா சோப்ரா, தமிழில் நடிகர் விஜயுடன் தமிழன் படத்தில் நடித்தார். இதை தொடர்ந்து இந்திப் படங்களில் நடிக்க தொடங்கிய அவர் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.பிரியங்கா சோப்ரா, படு பிஸியாக உள்ளார்.தற்போது பிரியங்கா சோப்ராவுக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்துள்ளது. குவாண்டிகோ என்ற அமெரிக்க டி.வி சீரியல் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானார். 2000ம் ஆண்டு உலக அழகி பட்டம் வென்ற பிரியங்கா சோப்ராவுக்க் இன்னும் மவுசு குறையவில்லை என்றே கூறலாம்.

. நடிகை பிரியங்கா சோப்ரா, தன்னைவிட சுமார் 10 வயது இளையவரான ஹாலிவுட் பாடகர் நிக் ஜோனசை காதலித்து வந்தார். இருவரும் கடந்த 2018 ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் செய்துக்கொண்டனர். அடிக்கடி தனது கணவருடன் இருக்கும் போட்டோக்களையும் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருந்தார்.  

வீட்டில் முதல் தீபாவளி சமீபத்தில் பிரியங்கா சோப்ராவும் ,அவருடைய கணவரும் சேர்ந்து வீடு வாங்கினர். அந்த வீட்டில் தங்களின் முதல் தீபாவளியை கொண்டாடிய அவர்கள் அந்த போட்டோக்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்து கொண்டனர். இதுகுறித்து பதிவிட்ட நடிகை பிரியங்கா சோப்ரா, "எங்கள் முதல் வீட்டில் நாங்கள் ஒன்றாக சேர்ந்து முதல் தீபாவளி கொண்டாடுகிறோம். இது எப்போதும் ஸ்பெஷலாக இருக்கும்" என குறிப்பிட்டிருந்தார். 

நடிகை பிரியங்கா சோப்ரா திருமணத்திற்கு பிறகு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது பெயருக்கு பின்னால் கணவரின் சர் நேம்மான ஜோனஸை சேர்த்திருந்தார்.இந்நிலையில் தனது பெயருக்கு பின்னால் இருந்த கணவரின் பெயரை திடீரென நீக்கியுள்ளார் பிரியங்கா சோப்ரா. பிரியங்கா சோப்ரா கணவரின் பெயரை நீக்கியதை பார்த்த அவருடைய ரசிகர்கள் அதிர்ச்சியாகியுள்ளனர்.

பிரியங்கா சோப்ரா விவகாரத்து செய்ய போகிறாரா ?இல்லை வேறென்ன காரணம் என்று ரசிகர்களும் குழப்பத்தில் உள்ளனர். இந்த நிலையில் இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பிரியங்கா சோப்ராவே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கணவரின் கழுத்தில் கையைப்போட்டுக்கொண்டிருப்பது போன்ற புதிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டு நண்பர்களே, குடும்பத்தினரே I love you @nickjonas என்று குறிப்பிட்டுள்ளார்.