இன்ஸ்டாவில் கணவரின் பெயர் நீக்கம்... சமந்தாவை அடுத்து பிரியங்கா சோப்ரா.. ஷாக்கில் ரசிகர்கள்!

பிரபல நடிகையான பிரியங்கா சோப்ரா இன்ஸ்டாகிராமில் தனது பெயருக்கு பின்னால் இருந்த கணவரின் பெயரை திடீரென நீக்கியிருப்பது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

இன்ஸ்டாவில் கணவரின் பெயர் நீக்கம்... சமந்தாவை அடுத்து பிரியங்கா சோப்ரா.. ஷாக்கில் ரசிகர்கள்!

நடிகை பிரியங்கா சோப்ரா, தமிழில் நடிகர் விஜயுடன் தமிழன் படத்தில் நடித்தார். தொடர்ந்து இந்திப் படங்களில் நடிக்க தொடங்கிய அவர் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். குவாண்டிகோ என்ற அமெரிக்க டி.வி சீரியல் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானார்.

 ஹாலிவுட்டிலும் கால் பதித்த பிரியங்கா சோப்ரா, ஹாலிவுட் படங்கள், வெப் சீரிஸ்கள் என படு பிஸியாக உள்ளார். நடிகை பிரியங்கா சோப்ரா, தன்னைவிட சுமார் 10 வயது இளையவரான ஹாலிவுட் பாடகர் நிக் ஜோனசை காதலித்து வந்தார்.

இவர்கள் இருவரும் கடந்த 2018 ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் செய்துக்கொண்டனர். திருமணத்திற்கு பிறகும் படங்களில் செம பிஸியாக இருக்கும் பிரியங்கா சோப்ரா கணவருடன் நேரத்தை செலவழிப்பதற்கும் தவறுவதில்லை. அடிக்கடி கணவருடன் நேரத்தை செலவழிக்கும் போட்டோக்களையும் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.

திருமணத்திற்கு பிறகு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது பெயருக்கு பின்னால் கணவரின் சர் நேம்மான ஜோனஸை சேர்த்திருந்தார் நடிகை பிரியங்கா சோப்ரா. இந்நிலையில் தனது பெயருக்கு பின்னால் இருந்த கணவரின் பெயரை திடீரென நீக்கியுள்ளார் பிரியங்கா சோப்ரா.

பிரியங்கா சோப்ரா கணவரின் பெயரை நீக்கியதை பார்த்த நெட்டிசன்கள் அதிர்ச்சியாகியுள்ளனர். இதனால் சமந்தாவை தொடர்ந்து பிரியங்கா சோப்ராவும் கணவரை பிரியவுள்ளார் என்ற தகவல்கள் சமூகவலைத்தளங்களில் செம வைரலாக பேசப்பட்டு வருகிறது. அதுமட்டுமில்லாமல் பல்வேறு கேள்விகளை அடுக்கி வைக்கின்றனர் ரசிகர்கள்.

நட்சத்திர தம்பதிகளாக உலகளவில் ரசிகர்களை பெற்றுள்ள இருவரும் இதுகுறித்து வாய் திறக்கவில்லை.