பிரபல நடிகருடன் இணையும் பிரியா பவானி... நெக்ஸ்ட் மூவி அப்டேட் இதோ 

நடிகை பிரியா பவானி சங்கர், அடுத்ததாக ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பிரபல நடிகருடன் இணையும்  பிரியா பவானி... நெக்ஸ்ட் மூவி அப்டேட் இதோ 

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வருபவர் ஜெயம் ரவி. இவர் தற்போது மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தை தவிர இயக்குனர் கல்யாண கிருஷ்ணன் இயக்கும் புதிய படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் ஜெயம் ரவி. இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் ஹீரோயினாக நடிக்க உள்ளது யார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.  

அதன்படி, நடிகை பிரியா பவானி சங்கர், ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.