காதலன் பிறந்த நாளுக்கு ’நீ ஒரு மோசமான டீன் ஏஜ் பாய்’ என்று பதிவிட்ட நடிகை பிரியா பவானி சங்கர்!! வைரலாகும் வேற லெவல் போட்டோ

காதலன் பிறந்த நாளுக்கு ’நீ ஒரு மோசமான டீன் ஏஜ் பாய்’ என்று பதிவிட்ட நடிகை பிரியா பவானி சங்கர்!! வைரலாகும் வேற லெவல் போட்டோ

தமிழ் திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வரும் நடிகை பிரியா பவானி சங்கர், ஆரம்பத்தில் தனியார் தொலைக்காட்சியில் சீரியல் நடிகையாக அறிமுகமானார். பின்னர் நிகழ்ச்சி தொகுப்பாளினியாகவும் பணியாற்றிய பிரியா பவானி சங்கர்  ‘மேயாதமான்’ படம் மூலம் திரைத்துறையில் அடியெடுத்து வைத்த இவர், அதன்பிறகு  படிபடியாக வளர்ந்து தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வளர்ந்து உள்ளார். 

தமிழ் திரையுலகின் பிரபல நடிகையாக இருந்து வரும் பிரியா பவானி சங்கர்  ராஜவேல் என்பவரை கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக காதலித்து வருகிறார். அவ்வப்போது சோஷியல் மீடியாவில் ஆக்டிவ்வாக இருக்கும் இவர், தனது காதலருடன் இருக்கும் புகைப்படத்தை அடிக்கடி பதிவிட்டு வருவார். இந்நிலையில் தனது காதலரின் பிறந்த நாளை அடுத்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது காதலருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி புகைப்படத்துடன் பதிவு செய்துள்ளார்.

அதில் ’நீ ஒரு மோசமான டீன் ஏஜ் பையனிலிருந்து ஒரு அற்புதமான மனிதராக மாறி இருப்பதை நான் பார்த்து வருகிறேன். நான் மிகவும் அதிர்ஷ்டசாலி. எப்பொழுதும் புன்னகை, சாகசங்கள், அன்பு, நட்பு, ஆசீர்வாதம், அமைதி, ஆரோக்கியம் என அனைத்தும் உனக்கு கிடைக்க வாழ்த்துகிறேன்’ என்று பதிவு செய்துள்ளார்.

 

மேலும் நான் பதிவிட்டுள்ள இந்த புகைப்படம் உனக்கு பிடிக்காது என்று தெரியும், அதனால் தான் இதை நான் பதிவு செய்துள்ளேன் என்று, பின் குறிப்பாக பிரியா பவானி சங்கர் தெரிவித்துள்ளார். பிரியா பவானி சங்கரின் இந்த புகைப்படத்துடன் கூடிய பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.