100-வயதை பூர்த்தி செய்த மூதாட்டிக்கு பிரதமர் வாழ்த்து...!!

100-வயதை பூர்த்தி செய்த மூதாட்டிக்கு பிரதமர் வாழ்த்து...!!

100 வயதை பூர்த்தி செய்த மூதாட்டிக்கு பிரதமர் மோடி கடிதம் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வாழ்மங்கலம் பகுதியை சேர்ந்தவர் பாட்டி காமாட்சி கணபதி. இவரது கணவர் கணபதி இந்திய சுதந்திர போராட்டத்தில் சுபாஷ் சந்திரபோஸ் அவர்களோடு இணைந்து இந்திய ராணுவத்தில் பணியாற்றியுள்ளார்.

இந்த நிலையில் சுதந்திரப் போராட்ட வீரர் கணபதி கடந்த 2011ஆம் ஆண்டு இறந்துள்ளார். இவருக்கு மத்திய மற்றும் தமிழக அரசு சார்பில் பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சுந்தர போராட்ட வீரர் கணபதியின் மனைவி காமாட்சி கணபதி தற்போது புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் அவரது மகள் வீட்டில் வசித்து வருகிறார். இவருக்கு நான்கு மகள்கள் உள்ளார்கள். இந்த நிலையில் இன்று அந்த பாட்டி100 வயதை எட்டியுள்ளார். இதனையொட்டி அந்த பாட்டிக்கு குடும்பத்தார்கள் மற்றும் ஊர் மக்கள் இணைந்து பூர்ணாபிஷேக விழா நடத்தியுள்ளனர். காரைக்கால் அடுத்த திருப்பட்டினத்தில் உள்ள அபிராமி அம்மன் கோவில் அருகே இவ்விழா நடத்தப்பட்டது.

இதில் ஊர் மக்கள் இணைந்து பாட்டி காமாட்சிக்கு கேக் வெட்டி கொண்டாடி அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். இதில் நாகை மற்றும் காரைக்கால் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள், ஊர் மக்கள் அனைவரும் கலந்து கொண்டு பாட்டியிடம் ஆசீர்வாதம் வாங்கி சென்றனர். இந்த நிலையில் பாட்டி காமாட்சி அம்மாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பாட்டியின் 100வது பிறந்தநாளை முன்னிட்டு கடிதம் வாயிலாக வாழ்த்து தெரிவித்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி போக்குவரத்து துறை அமைச்சர் சந்திர பிரியங்காவும் நேரில் சென்று பாட்டியிடம் வாழ்த்து பெற்றார்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வாழ்மங்கலம் பகுதியை சேர்ந்தவர் பாட்டி காமாட்சி கணபதி இவரது கணவர் கணபதி இந்திய சுதந்திர போராட்டத்தில் சுபாஷ் சந்திரபோஸ் அவரோடு இணைந்து இந்திய ராணுவத்தில் பணியாற்றி வந்தவர். 

இதையும் படிக்க:4 மாநிலங்களில் இடைத்தேர்தல் நிலவரம்..!!