வனிதா மீது காதல் கொண்ட பவர்ஸ்டார்... மேடையிலேயே காதலை வெளிப்படுத்திய தருணம்...
வனிதாவுக்கும் எனக்கும் திருணம் நடப்பது ஆண்டவன் கையில் உள்ளது என்று கூறியுள்ளார் பவர்ஸ்டார்.

சம்பள பாக்கி தொடர்பான வழக்கில் நடிகர் சிவகார்த்திகேயன், தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவுக்கு இடையே சமரசம் ஏற்பட்டுள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த “மிஸ்டர் லோக்கல்” படத்தை தயாரிப்பதற்கு தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ஒப்பந்தம் போட்டு, 15 கோடி ரூபாய் சம்பளம் பேசியுள்ளாா்.
ஆனால் குறிப்பிட்ட தொகையை வழங்காமல் 4 கோடி ரூபாய் பாக்கி வைத்திருப்பதாக கூறப்படுகிறது. இதுதொடா்பாக சிவகாா்த்திகேயன் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தாா். இந்நிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது ஞானவேல் ராஜா தரப்பில் இருந்து சமரச மனு அளிக்கப்பட்டது. அதனை தொடா்ந்து இருதரப்பினா் இடையே சமரசம் ஏற்பட்டுள்ளது.
அஜீத் மற்றும் சங்கவி நடிப்பில் வெளியான "அமராவதி" திரைப்படத்தை டிஜிட்டலில் வெளியிடுவதாக தயாரிப்பாளர் சோழா பொன்னுரங்கம் அறிவித்துள்ளார்.
சோழா கிரியேஷன்ஸ் சார்பில், 1993-ம் ஆண்டு சோழா பொன்னுரங்கம் தயாரித்து, வெளியான படம் "அமராவதி". அஜீத் அரும்பு மீசையுடன் நடித்த இந்த காதல் காவியத்தில், ஜோடியாக சங்கவி நடிக்க இயக்குனர் செல்வா இப்படத்தை இயக்கி இருந்தார். அமராவதி படத்தின் மூலம் அஜீத் குமாரை கதாநாயகனாக திரையுலகிற்கு சோழா பொன்னுரங்கம் அறிமுகப்படுத்தி, 30' ஆண்டுகள் நிறைவு பெறுகிறது.
எளிமை, அன்பு, கொடை என அனைத்து நற்குணங்களுக்கும் சொந்தக்காரராக உயர்ந்து நிற்கிறார் அஜீத் குமார். அவருக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் விதமாக, அஜீத் ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி, வருகின்ற மே மாதம் முதல் தேதி, அஜீத் குமார் பிறந்தநாளில் அவரின் முதல் படமான "அமராவதி" படத்தை டிஜிட்டலில் வெளியிடுவதாக தயாரிப்பாளர் சோழா பொன்னுரங்கம் அறிவித்துள்ளார்.
அதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், பிரசாத் ஸ்டுடியோவில், இரவு பகலாக நவீன தொழில்நுட்பத்துடன் டிஜிட்டல் ஆக்கப்பட்டு வருவதாகவும், மேலும் தற்போதைய இசை வடிவில், புதிய பின்னணி இசையும் அமைக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். அஜீத் ரசிகர்கள் ஆர்ப்பரித்து கொண்டாடும் விதமாக, மே முதல் தேதி, அஜித் 'பிறந்தநாள் பரிசாக' அமராவதி திரைக்கு வருகிறது என்று அப்படத்தின் தயாரிப்பாளர் சோழா பொன்னுரங்கம் கூறியுள்ளார்.
நான் இதுவரையும் என்னுடைய படங்களில் குடிப்பது, தம் அடிப்பது போலவும் படம் எடுத்ததில்லை இயக்குநர் விக்னேஷ் சிவன் பேட்டியளித்துள்ளார்.
ஆவணத் திரைப்படம் போட்டி:
சென்னை பெருநகர காவல்துறை சார்பில் நடத்தப்பட்ட போதைப் பொருட்களுக்கு எதிரான சிறப்பு நடவடிக்கை குறித்த ஆவணத் திரைப்பட போட்டியில் வெற்றி பெற்ற நபர்களுக்கு பரிசுகளை வழங்கிய பின் பெருநகர காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இயக்குநர் விக்னேஷ் சிவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பரிசு:
இந்த போதை பொருட்கள் பயன்பாட்டிற்கு எதிரான போராட்டத்தில் இளைஞர்களை ஈடுபடுத்தும் நோக்கில் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆதரவுடன் நடத்தப்பட்ட ஆவணத் திரைப்படம் போட்டியில் 289 பதிவுகள் பெறப்பட்ட நிலையில் அதில் வெற்றி பெற்ற நபர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய இயக்குனர் விக்னேஷ் சிவன்,
ஒரு தொடக்கமாக:
திரைத்துறையில் போதைப்பொருள் விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த குறும்பட போட்டி என்பது ஒரு தொடக்கமாக அமைந்துள்ளது எனவும் இது போன்ற விசயங்களை படமாக எடுக்க முடியாது என்பதாலேயே குறும்படமாக எடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் சினிமாவில் போதை பழக்கம் காட்சிகள் இல்லாமல் காண்பிப்பது நல்லது தான் இது குறித்து காவல்துறை கூட அறிவுறுத்தி இருப்பதாகவும் கூறியுள்ளார்.
இதுவரை..:
தொடர்ந்து பேசிய விக்னேஷ் சிவன் போதைப்பொருள் பயன்படுத்தும் காட்சிகள் படங்களில் வரும் பொழுது கீழேயே விழிப்புணர்வு ஏற்படுத்த கார்டு போடப்படுகிறது எனவும் தற்பொழுது அது போன்ற காட்சிகள் சினிமாவில் குறைந்துள்ளது எனவும் போகப் போக அதை குறைத்து கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், சில இயக்குனர்கள் அது போன்ற காட்சிகளை எடுக்காமல் இருக்க வேண்டும் என்று தான் ஆசைப்படுவதாகவும் பேசியுள்ளார்.
விழிப்புணர்வு:
அதனைத் தொடர்ந்து நான் இதுவரையும் என்னுடைய படங்களில் குடிப்பது, தம் அடிப்பது போலவும் படம் எடுத்ததில்லை எனவும் அது போன்ற காட்சிகள் படங்களில் வைக்கும் பொழுது படம் தொடங்குவதற்கு முன்னதாகவே அது குறித்து விழிப்புணர்வு காடு போடப்படும் எனவும் கூறிய அவர் ஆனால் என் படங்களில் அது போன்ற கார்டு போடப்பட்டது இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
நானும் ரவுடிதான்:
மேலும் நானும் ரவுடிதான் படம் பாண்டிச்சேரியில் எடுத்தேன் எனவும் அந்தப் படத்தில் கூட குடிப்பது போன்ற காட்சிகள் எதுவும் வைக்கவில்லை எனவும் தெரிவித்த அவர் என்னால் முடிந்தவரை என்னுடைய நண்பர்கள், என் படத்தில் வரும் ஹீரோக்களை குடிக்க விடாமல் நானும் பார்த்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: கலாஷேத்ரா மாணவிகளின் பாலியல் புகார்... விசாரணைக்கு உத்தரவு!!!
வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி நடித்துள்ள விடுதலை படத்தின் முதல் பாகத்திற்கு சென்சார் போர்டு ஏ சான்றிதழ் வழங்கி உள்ளது.
வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி உள்ள விடுதலை திரைப்படம் வருகிற மார்ச் 31-ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. நடிகர் சூரி கதையின் நாயகனாகவும், விஜய் சேதுபதி கதாநாயகனாகவும் நடித்துள்ள இப்படத்தை எல்ரெட் குமார் தயாரித்துள்ளார். இப்படத்தில் நடிகர் சூரிக்கு ஜோடியாக இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷின் தங்கை பவானிஸ்ரீ நடித்துள்ளார். படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்து உள்ளார்.
விடுதலை படத்தை இரண்டு பாகங்களாக எடுத்துள்ளார் வெற்றிமாறன். அப்படத்தின் முதல் பாகம் தான் அடுத்த வாரம் ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் தமிழ்நாட்டில் வெளியிடுகிறது. படத்தின் ரிலீஸ் நெருங்கி வருவதால் படம் குறித்த அப்டேட்டுகளும் அடுத்தடுத்து வெளிவந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில் படத்தின் சென்சார் மற்றும் ரன்னிங் டைம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அதன்படி விடுதலை படத்திற்கு சென்சார் போர்டு ஏ சான்றிதழ் கொடுத்துள்ள நிலையில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான படங்களில் ஏ சான்றிதழ் பெறும் மூன்றாவது படமாக விடுதலை உள்ளது. இதற்கு முன் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த பொல்லாதவன், வடசென்னை ஆகிய படங்களுக்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதன்மூலம் இப்படத்தில் சில ஆபாச வசனங்கள் அல்லது காட்சிகள் இடம்பெற்றிருக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. விடுதலை படத்தின் திரைக்கதைக்கு தேவைப்படும் அந்த காட்சிகளுக்கு கத்திரிபோட வெற்றிமாறன் விரும்பாததால் சென்சார் போர்டு அதிகாரிகள் ஏ சான்றிதழ் கொடுத்துள்ளதாக தெரிகிறது. அதுமட்டுமின்றி இப்படம் 2 மணிநேரம் 30 நிமிடங்கள் ரன்னிங் டைம் கொண்டிருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிக்க: பத்து தல படத்தில் நடிக்க மறுத்த ரஜினி.... காரணம் கூறிய இயக்குனர்!!!
ஒபிலி என் கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள பத்து தல படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்க மறுத்ததற்கான காரணத்தை தயாரிப்பாளர் வெளியிட்டுள்ளார்.
சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை போன்ற படங்களை இயக்கியவர் ஒபிலி என் கிருஷ்ணா. இவர் நீண்ட இடைவெளிக்கு பின் இயக்கியுள்ள திரைப்படம் பத்து தல. இது கன்னடத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன முஃப்டி படத்தை தழுவி இப்படம் எடுக்கப்பட்டு உள்ளது. இதில் ஏஜிஆர் என்கிற கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் சிம்பு நடித்துள்ளார். மணல் மாஃபியாவை மையமாக வைத்து இப்படம் தயாராகி உள்ளது.
பத்து தல படத்தில் சிம்பு உடன் பிரியா பவானி சங்கர், கவுதம் கார்த்திக், டிஜே அருணாச்சலம், கவுதம் மேனன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இது தவிர நடிகர் ஆர்யாவின் மனைவி சாயிஷாவும் இப்படத்தில் ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடி இருக்கிறார். பத்து தல படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து உள்ளார். இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பாக கே.இ.ஞானவேல் ராஜா தயாரித்து இருக்கிறார்.
பத்து தல திரைப்படம் வருகிற மார்ச் 30-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தின் ரிலீசுக்கு இன்னும் ஒரு வாரமே எஞ்சியுள்ள நிலையில், அதற்கான புரமோஷன் பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. அதன்படி இப்படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பத்து தல படத்திற்காக பல்வேறு பேட்டிகளை கொடுத்துள்ளார். அந்த வகையில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் பத்து தல படத்தில் ரஜினிகாந்த் நடிக்க மறுத்ததாக தெரிவித்துள்ளார்.
கன்னடத்தில் வெளியான முஃப்டி திரைப்படத்தை அப்படியே ரீமேக் செய்ய தான் முதலில் முடிவெடுத்திருந்தனர். அப்படத்தில் கன்னட சூப்பர்ஸ்டார் ஷிவ ராஜ்குமார் நடித்த வேடத்தில் தமிழில் ரஜினிகாந்தை நடிக்க வைக்க திட்டமிட்டிருந்தார்களாம். இதுகுறித்து ரஜினியை அணுகியபோது அவர் நடிக்க மறுத்துவிட்டாராம். ரீமேக் படம் என்கிற ஒரே காரணத்துக்காக இப்படத்தில் நடிக்க ரஜினி மறுத்துவிட்டாராம். இதையடுத்து தான் இந்த படத்தில் சிம்புவை நடிக்க வைத்ததாக ஞானவேல் ராஜா தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: நடிகர் அஜித் குமாரின் தந்தை உடல்நலக்குறைவால் உயிரிழப்பு...!!