பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் திடீர் உயிரிழப்பு...! காரணம் இதோ...

பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் திடீர் உயிரிழப்பு...! காரணம் இதோ...

பத்ம பூஷன் விருது பெற்ற பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் இன்று காலமானார்.

1974 ஆம் ஆண்டு வெளிவந்த தீர்க்க சுமங்கலி என்ற திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த ”மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ” என்ற பாடல் மூலம் இல்லந்தோறும் ஒலித்த குரல் என்றால் அது மூத்த பின்னணி பாடகி வாணி ஜெயராமின் குரல் தான். 

வேலூரை பூர்விகமாக கொண்ட இவர், தமிழ், தெலுங்கு, கன்னடம் உட்பட 19 மொழிகளில் பாடல்களை பாடியுள்ளார். மேலும் ஏழு ஸ்வரங்களின் கான சரஸ்வதி என அழைக்கப்படும் வாணி ஜெயராம்க்கு, சமீபத்தில் பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இப்படி தனது குரலில் பல்வேறு ஹிட்ஸ்களை கொடுத்த வாணி ஜெயராம், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனது இல்லத்தில் தவறி விழுந்து  உயிரிழந்துள்ளார். இவருடைய திடீர் மரணம் இசை ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.