"விக்ரம் 61" படத்தின் பூஜை.. கேஜிஎப் படம் போல் இருக்குமாம்? - கதையை உடைத்த பா.ரஞ்சித்!

நடிகர் விக்ரம் நடிக்கும் "விக்ரம் 61" படத்தின் பூஜை இன்று நடைபெற்றது.

"விக்ரம் 61" படத்தின் பூஜை.. கேஜிஎப் படம் போல் இருக்குமாம்? - கதையை உடைத்த பா.ரஞ்சித்!

ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் தயாராக இருக்கும் "சியான் 61" என தற்காலிகமாக பெயர் வைத்துள்ள படத்தின் பூஜை இன்று சென்னை அடையாறில் நடைபெற்றது.

மிகவும் பிரமாண்டமாக நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், நடிகர் விக்ரம், பா ரஞ்சித், நடிகர் சிவகுமார், நடிகர் ஆர்யா, இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ், டான்ஸ்ஸ் மாஸ்டர் சாண்டி மற்றும் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

நடிகர் ஆர்யா என்ட்ரி:

இந்த நிகழ்வில் நடிகர் ஆர்யா சைக்கிளிங் உடையில் கலந்து கொண்டார். தன்னுடன் இணைந்து சைக்கிளிங் ஓட்டும் குழுவினருடன் நேரடியாக அரங்கில் நுழைந்தது அங்கிருந்தவர்களை ஆச்சிரியத்தில் ஆழ்த்தியது.

இயக்குனர் பா ரஞ்சித் மாலை முரசு தொலைக்காட்சிக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், ஏற்கனவே கேஜிஎப் இப்படம் கோலார் தங்க சுரங்கத்தை மையமாக வைத்து ஆங்கிலேயர்களுக்கு எதிராக நடந்த போராட்டங்களையும் அதில் நடந்த சம்பவத்தையும் மையமாக வைத்து எழுதப்பட்ட இக்கதையில் நடிகர் விக்ரம் மற்றும் பல நட்சத்திரங்கள் நடிக்க இருக்கின்றனர்.

ஆங்கிலேயர் காலகட்டத்தில் கோலார் சுரங்கம் ஆரம்பிக்கும் போது ஏற்பட்ட போராட்டங்கள் மற்றும் ஆங்கிலேயர்களின் அட்டூழியங்கள் மற்றும் அடக்குமுறைகள் என பல விஷயங்களை உள்ளடக்கிய கதையாக இருக்கும் என இயக்குனர் பா ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே கோலார் தங்க சுரங்கத்தை மையமாக கொண்டு உருவான கன்னட மொழி படமான கேஜிஎப் 5 மொழிகளில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டானது. வெளிமாநில படமாக இருந்தாலும் அனைத்து சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. கேஜிஎப் பாகம் 1, பாகம் 2 என வெளியாகி பெரும் கலெக்சனை அள்ளிய கேஜிப் படம் ஒரு கற்பனை கதை. ஆனால் தற்போது சியான் 61 படத்தின் கதையானது உண்மையை தழுவி எடுக்கப்பட இருப்பதாக கூறப்படுவதால், கேஜிஎப் படத்தை மிஞ்சிய கதைகளம் இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.