விஜய் உடன் நடனமாட சிறப்பு பயிற்சி எடுக்கும் பூஜா ஹெக்டே.. வைரல் புகைப்படங்கள் 

விஜய் நடிப்பில் உருவாகி வரும்  பீஸ்ட் படத்திற்காக நடிகை பூஜா ஹெக்டே சிறப்பு பயிற்சி எடுத்து வருகிறார்.
விஜய் உடன் நடனமாட சிறப்பு பயிற்சி எடுக்கும் பூஜா ஹெக்டே.. வைரல் புகைப்படங்கள் 
Published on
Updated on
1 min read

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் தற்போது நடித்து வரும் படம் பீஸ்ட். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் மற்றும் செகண்ட் லுக் வெளியாகி இணையத்தை கலக்கியது. கொரோனா பரவல் மற்றும் ஊரடங்கு காரணமாக இதன் படப்பிடிப்பு தள்ளிவைக்கப்பட்டது. 

இந்நிலையில் கொரோனா பரவல் குறைந்து தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு வருவதால் ஜூலை மாதம் முதல் ஷூட்டிங்கைத் தொடங்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். 

இப்படத்திற்காக சென்னையில் உள்ள ஸ்டூடியோ ஒன்றில் செட் அமைக்கும் வேலைகள் நடந்து முடிந்துள்ளன. இங்கு பாடல் காட்சிகளை படமாக்க இருக்கிறார்கள். இந்நிலையில் விஜய்யுடன் நடனம் ஆடுவதற்காக நடிகை பூஜா ஹெக்டே சிறப்பு பயிற்சி எடுத்து வருவதாக தனது சமூக வலைத்தளபக்கத்தில் பதிவு செய்திருக்கிறார்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com