விற்பனைக்கு வந்த பொன்னியின் செல்வன் புடவைகள்!!!

விற்பனைக்கு வந்த பொன்னியின் செல்வன் புடவைகள்!!!

பொன்னியின் செல்வன் படத்தின் வெளியீட்டை ஒட்டி, படத்தின் முக்கிய கதாபாத்திரங்களின் படங்களோடு பட்டுப் புடவைகள் விற்பனைக்கு வந்துள்ளது.

வருகிர செப்டம்பர் மாதம் 30ம் தேதி, இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியாக இருக்கும் பொன்னியின் செல்வன் பாகம் 1 படத்தின் ட்ரெயிலர் மற்றும் பாடல்கள் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், படத்திற்கான எதிர்பார்ப்பு, உலகளவில் அதிகரித்துள்ளது என்று தான் கூற வேண்டும்.

சுபாஸ்கரனின் லைகா ப்ரொடக்‌ஷன்ஸ் மற்றும் மணிரத்னமின் மெட்ராஸ் டாக்கிஸ் இணைந்து தயாரித்துள்ள இந்த படமானது, தியேட்டர்களில், ஐ-மேக்ஸ் பாணியில் வெளியாக இருக்கும் நிலையில், தற்போது படத்திற்கான ப்ரொமோஷன் வேலைகள் மிக தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.

அவ்வகையில், நான்கு வண்ணங்களில் பட்டுப் புடவைகள் விற்பனைக்கு வந்துள்ளது.