வெளியாக இருக்கும் பொன்னியின் செல்வன் டீசர்:
பல ஆண்டுகளாக எதிர்பார்க்கப்பட்ட பொன்னியின் செல்வன் படம் -1 ன் டீசர் வெளியீட்டு தேதியை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

மணிரத்தினம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன்- 1 திரைப்படம் பல நட்சத்திர பட்டாளங்களுடன் உருவாகியுள்ள வரலாற்று திரைப்படம். 1950 களில் ஒரு பத்திரிகை தொடராக வெளிவந்த கல்கியின் புகழ்பெற்ற நாவல் தான் பொன்னியின் செல்வன். இந்த நாவலை அடிப்படையாக கொண்டு தான் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை உருவாக்கியுள்ளார் மணிரத்தினம்.
லைக்கா ப்ரோடக்ஷன் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, சரத்குமார், விக்ரம் பிரபு, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் பச்சன் உள்ளிட்டவர்கள் நடித்திருக்கின்றனர். மேலும் அவர்களின் கதாபாத்திரம் குறித்த தகவல்களையும் படக்குழு அறிவித்திருந்தது. அந்த வகையில், ஆதித்த கரிகாலனாக விக்ரம், அருண்மொழி வர்மனாக ஜெயம் ரவி, சுந்தர சோழனாக பிரகாஷ்ராஜ், வந்தியத் தேவனாக கார்த்தி, குந்தவையாக த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் பச்சன் நந்தினி தேவி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் சரத்குமார் பெரிய பழுவேட்டரையராகவும் மற்றும் பார்த்திபன் சின்னப் பழுவேட்டரையராகவும் நடித்துள்ளனர்.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி, என பல மொழிகளில் வெளியாக உள்ள இந்த படத்திற்கு ஏ. ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். மேலும் இந்த படம் செப்டம்பர் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில், படத்தின் டீசர் வெளியீட்டு விழா நாளை (ஜூலை 8) சென்னை டிரேட் சென்டரில் நடைப்பெற உள்ளதாக அறிக்கை ஒன்றையும் படக்குழு வெளியிட்டு அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.
#JustIN | நாளை வெளியாகிறது பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் டீசர்; ஆர்வத்தில் காத்திருக்கும் ரசிகர்கள்#PonniyinSelvanTeaser #PonniyinSelvan #PS1 #ManiRatnam #MalaimurasuCine #Malaimurasu pic.twitter.com/tPSvlnipTu
— Malaimurasu TV (@MalaimurasuTv) July 7, 2022