ஊசியில் நூலுக்கு பதில், ஒட்டகத்தை திணித்தால் நுழையாது - இந்தி திணிப்புக்கு கவிஞர் வைரமுத்து கண்டனம்!

ஊசியில் நூலுக்கு பதில், ஒட்டகம் திணிக்கப்படுவதாக இந்தி திணிப்பு குறித்து கவிஞர் வைரமுத்து கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஊசியில் நூலுக்கு பதில், ஒட்டகத்தை திணித்தால் நுழையாது - இந்தி திணிப்புக்கு கவிஞர் வைரமுத்து கண்டனம்!

மத்திய அரசுக்கு சொந்தமான ஜிப்மர் மருத்துவமனையில், அனைத்து பதிவுகளிலும் இந்தி கட்டாயம் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்தநிலையில் இந்தி திணிப்புக்கு கடும் அதிருப்தி தெரிவித்து டுவிட் செய்துள்ள கவிஞர் வைரமுத்து, கடைசியில்  இந்தி படிப்போரை வெறுக்கமாட்டோம் என்றும், அதேசமயம் திணிப்போரை ரசிக்கவும் மாட்டோம் , ஒருமைப்பாடு சிறுமைப்படாதிருக்க நாட்டின் பன்மைக்கலாசாரம் பாதுகாக்கப்படவேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.