நடிகர் விஜய் - புதுவை முதலமைச்சர் சந்திப்பின் புகைப்படங்கள் இணையத்தில் செம வைரல்!!

நடிகர் விஜய் - புதுவை முதலமைச்சர்  சந்திப்பின்  புகைப்படங்கள் இணையத்தில் செம வைரல்!!

நடிகர் விஜயை புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி சந்தித்து பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. சென்னை பனையூரில் உள்ள நடிகர் விஜய் வீட்டில் இந்த சந்திப்பு நடந்ததாக தகவல்கள் வெளியானது.

சுமார் ஒரு மணிநேரம் நடந்த இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமாகவே இருந்ததாக முதலமைச்சர் ரங்கசாமி தரப்பு தகவல் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் பிப்ரவரி 19ஆம் தேதி உள்ளாட்சித் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், விஜய் உடன் ரங்கசாமி சந்திப்பில் ஈடுபட்டுள்ளது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இந்நிலையில் விஜய் மற்றும் புதுவை முதல்வர் ரங்கசாமி இருவரின் சந்திப்பு குறித்த தகவல் மட்டும் வெளிவந்த நிலையில், இவர்களின் சந்திப்பு குறித்த புகைப்படங்கள் சற்றுமுன் இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் விஜய்யும், புதுவை முதல்வர் ரங்கசாமி இருவரும் உட்கார்ந்து சிரித்துக் கொண்டே பேசும் புகைப்படம் சமூக வலைதளங்களில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.