விருந்துக்காக கொச்சி சென்ற நயன் - விக்கி தம்பதி...! அடுத்த பயணம் எங்கே தெரியுமா?

கொச்சி விமான நிலையத்தில் எடுக்கப்பட்ட நயன் (ம) விக்கியின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

விருந்துக்காக கொச்சி சென்ற நயன் - விக்கி தம்பதி...! அடுத்த பயணம் எங்கே தெரியுமா?

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயனுக்கும், இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் கடந்த ஜூன் மாதம் 9 ஆம் தேதி சென்னை மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் உறவினர்கள் நண்பர்கள் மற்றும் திரைபிரபலங்கள் முன்னிலையில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. திருமணம் முடிந்த கையோடு மறுநாளே விக்கி - நயன் தம்பதி திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வந்தனர். அதன்பின் மீண்டும் சென்னை வந்து பத்திரிக்கையாளர்களை சந்தித்து தங்களது நன்றியை தெரிவித்தனர்.

இந்நிலையில் அடுத்ததாக நயன் - விக்கி தம்பதி தற்போது கேரளாவில் உள்ள நயந்தாராவின் அம்மா வீட்டிற்கு விருந்துக்கு சென்று உள்ளதாக தகவல் வெளியானது. 

கேரள மாநிலத்தில் உள்ள கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து விக்னேஷ் சிவன், நயன்தாரா வெளியே வந்த போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

அதாவது கொச்சியில் நயன்தாராவின் அம்மா வீட்டில் புதுமண தம்பதிகளுக்கு விருந்து அளிக்கப்பட்டது என்றும், அதற்குபிறகு கொச்சியில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றிலும் சிறப்பு விருந்து அளிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனையடுத்து தம்பதி இருவரும் வெளிநாட்டிற்கு ஹனிமூன் செல்லவிருப்பதாகவும், யாருமில்லாத தீவுகளை நயன்தாரா ஹனிமூனுக்கு தேர்வு செய்ததாகவும், அந்த தீவில் இருவரும் சுமார் இரண்டு வாரங்கள் வரை ஹனிமூன் காலத்தை கழிக்க முடிவு செய்திருப்பதாகவும் தகவல் கூறப்படுகிறது.