பொருளாதார நெருக்கடியில் புரவி இதழ்...!!

பொருளாதார நெருக்கடியில் புரவி இதழ்...!!

புரவி இதழ் பொருளாதார நெருக்கடியில் இருப்பதாகவும் அதனை மீட்க உதவுமாறும் அதன் ஆசிரியர் அருண் வாசகர்களுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

தமிழில் வெளிவரும் கலை இலக்கிய இதழ்களில் 'புரவி'யும் ஒன்று. இதுவரை 20 புரவி இதழ்கள் வெளிவந்துள்ளன. அதில் ஒன்று சிறப்பிதழ். ஒவ்வொரு இதழுமே காத்திரமான பல படைப்புகளைத் தாங்கி வெளிவந்தவைதான். தமிழின் முக்கியமான பல படைப்பாளிகளின் படைப்புகள் இவ்விதழ்களில் உள்ளன. ஆனால் புரவி இதழ் மிகக் கடுமையான பொருளாதார நெருக்கடிகளில் சிக்கியிருக்கிறது என அதன் ஆசிரியர் அருண் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பதிவிட்டுள்ள செய்தியில், கடுமையான பொருளாதார நெருக்கடியால் கடந்த ஆண்டு டிசம்பர் இதழையே போன மாதம்தான் வெளிக்கொண்டு வர முடிந்தது எனவும்  விரைவில் அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்வோம் எனவும் நம்பிக்கையளித்துள்ளார்.

மேலும், புரவியின் முந்தைய இதழ்கள் பல எங்களிடம் கையிருப்பில் உள்ளதாக கூறியுள்ள அவர் இதழைப் படிக்க விரும்பும் வாசகர்கள் அதற்கான பணம் செலுத்தி இதழைப் பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து, வாசகர்கள் இதழ்களை வாங்கி உதவுமாறு வேண்டுகோள் விடுத்துள்ள அருண் புரவி இதழுக்குக் கை கொடுக்குமாறும்  இதழ் தொடர்ந்து வெளிவர உதவுமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதையும் படிக்க:‘தி கேரளா ஸ்டோரி’ வங்கத்தில் தடை...! அதிரடி காட்டுமா தமிழ்நாடு. கேரளா...!!