பிரபல பாலிவுட் நடிகர் வீட்டில் குடியேறும் பரம சுந்தரி.!!

நடிகர் அமிதாப்பச்சனின் வீட்டுக்கு பிரபல நடிகை வாடகைக்கு குடியேறுவதாக பாலிவுட் வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றன.

பிரபல பாலிவுட் நடிகர் வீட்டில் குடியேறும் பரம சுந்தரி.!!

இந்தி சினிமாவின் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன். மும்பையின் பல்வேறு பகுதிகளில் அவருக்கு சொந்த பங்களாக்கள் உள்ளன. அந்தேரியின் மேற்கு பகுதியில் லோகண்ட் வாலா சாலையில் உள்ள அட்லாண்டிஸ் அடுக்குமாடி குடியிருப்பில் 27 மற்றும் 28 வது மாடியிலும் டூப்ளக்ஸ் வீடு அவருக்கு சொந்தமாக உள்ளது.

இந்த வீட்டை, பிரபல இந்தி நடிகை கீர்த்தி சனானுக்கு, நடிகர் அமிதாப் பச்சன் வாடகைக்கு கொடுத்துள்ளார். அமிதாப் பச்சன் வீட்டில் வாடகைக்கு இருக்க, அவர் இரண்டு வருடங்களுக்கு ஒப்பந்தம் போட்டுள்ளார். அட்வான்ஸ் தொகையாக ரூ.60 லட்சமும், மாத வாடகையாக ரூ.10 லட்சமும் வழங்க வேண்டும் என்றும் ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது.

நடிகர் அமிதாப்பச்சன் ஜூஹுவில் உள்ள தனது ஒரு இடத்தை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவுக்கு வாடகைக்கு கொடுத்துள்ளார். 15 வருடத்துக்கு அதற்கான ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

For Amitabh Bachchan, Ballroom Dancing With Kriti Sanon Brought Back  "College Days"