எட்டு உயிர்களை காப்பாற்றும் உடல் உறுப்பு தானம் : நடிகை மீனா உருக்கமான பதிவு !!

இன்று நான் என்னுடைய உடல் உறுப்பை தானம் செய்ய உறுதிமொழி எடுத்து இருக்கிறேன். இதுவே நம்முடைய வாழ்க்கையை சிறப்பாக வாழ்வதற்கான ஒரு அடையாளமாக இருக்கும் என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

எட்டு உயிர்களை காப்பாற்றும் உடல் உறுப்பு தானம் : நடிகை மீனா உருக்கமான பதிவு !!

நடிகை மீனா

நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் பெங்களூருவைச் சேர்ந்தவர். இவருக்கும் மீனாவுக்கும் கடந்த 2009ம் ஆண்டு திருமணம் நடந்தது, இவர்களுக்கு நைனிகா எனற மகளும் இருக்கிறார். இந்நிலையில் நுரையீரல் தொடர்பான பிரச்னைக்காக கடந்த சில மாதங்களாக சென்னையில் தனியார் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்த மீனாவின் கணவர் வித்யாசாகர் அண்மையில் சிகிச்சை அளிக்காமல் உயிரிழந்தார்.

புறாக்களின் எச்சம்

புறாக்களின் எச்சம் கலந்த காற்றைச் சுவாசிக்கிற போது உண்டாகக் கூடிய நோய் வித்யாசாகருக்கு ஏற்பட்டுள்ளது. பெங்களூருவில் அவருடைய வீட்டுக்கு அருகே நிறைய புறாக்கள் வளர்க்கப்பட்டு வந்துள்ளது. இதனால் ஏற்பட்ட அலர்ஜி சுவாசப் பிரச்சனையாக மாறியுள்ளது. இதனையடுத்து சென்னை ஆழ்வார்பேட்டையில உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த வித்யாசாகர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இறுதிச்சடங்கு 

மீனாவின் கணவர் மறைவிற்கு ரஜினி உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில் சென்னை, பெசண்ட் நகர் மின் மயானத்தில் வித்யாசகரின் உடல் தகனம் செய்யப்பட்டது. அவரின் இறுதிச் சடங்குகளை மீனாவும், அவரது மகள் நைனிகாவும் செய்தனர். அந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பார்வையாளர்களை மனம் கலங்க செய்துள்ளது.

இன்ஸ்டாகிராம்

இந்நிலையில் நடிகை மீனா உடல் உறுப்பு தானம் குறித்து உருக்கமான பதிவு ஒன்றை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அதில், ஒரு உயிரை காப்பற்றுவதை விட வேறு எதுவும் சிறந்த விஷயம் கிடையாது. உயிரைக் காப்பாற்றும் அப்படி ஒரு உன்னதமான விஷயம்தான் உடல் உறுப்பு தானம். நாள்பட்ட நோயால் அவதிப்பட்டு வரும் பலருக்கு மறு வாழ்க்கை கொடுக்கும் ஒரு வரம். அதை நான் தனிப்பட்ட முறையில் அனுபவித்து இருக்கிறேன்.

என்னுடைய கணவருக்கும் யாராவது அப்படி செய்திருந்தால் என்னுடைய வாழ்க்கை மாறி இருக்கும். ஒரு உடல் உறுப்பு தானம் எட்டு உயிர்களை காப்பாற்றும். அனைவருமே உடல் தானத்தின் முக்கியத்துவத்தை அறிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன். இது தானம் வழங்குபவருக்கும் பெறுபவருக்கும் மருத்துவர்களுக்கும் இடையில் இருக்கும் விஷயம் கிடையாது. இது குடும்பம், உற்றார் உறவினர்கள் போன்ற அனைவரையும் சம்பந்தப்பட்டது. இன்று நான் என்னுடைய உடல் உறுப்பை தானம் செய்ய உறுதிமொழி எடுத்து இருக்கிறேன். இதுவே நம்முடைய வாழ்க்கையை சிறப்பாக வாழ்வதற்கான ஒரு அடையாளமாக இருக்கும் என உருக்கமாக பதிவிட்டுள்ளார். மீனாவின் இந்த முடிவை பலரும் பாராட்டி ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். மறைந்த தனது கணவர் வித்யாசாகருக்கு மாற்று நுரையீரல் கிடைக்க மீனா பெரிதும் முயற்சி செய்தது குறிப்பிடத்தக்கது.