எனக்கு இப்படித்தான் காட்சி இருக்கணும்.. பீஸ்ட் படப்பிடிப்பில் நெல்சனுக்கு ஆர்டர் போட்ட பூஜா ஹெக்டே

எனக்கு இப்படித்தான் காட்சி இருக்கணும்.. பீஸ்ட் படப்பிடிப்பில் நெல்சனுக்கு ஆர்டர் போட்ட பூஜா ஹெக்டே

விஜய் மற்றும் சன் பிக்சர்ஸ் கூட்டணியில் பீஸ்ட் படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை இளம் இயக்குனர் நெல்சன் இயக்கி வருகிறார். மேலும் அனிருத் கத்தி, மாஸ்டர் படத்திற்கு பிறகு மூன்றாவது முறையாக விஜய்யுடன் இணைந்து பணியாற்றி வருகிறார்.

முன்னதாக பீஸ்ட் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியா நாட்டில் நடத்தி முடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சென்னையில் உள்ள கோகுலம் ஸ்டூடியோவில் இரண்டாம் கட்ட படப்பிடிப்புகள் முடிந்து தற்போது மூன்றாம் கட்ட படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் விஜய் மற்றும் பூஜா ஹெக்டே இருவரும் இணைந்த காட்சிகளும் ஒரு பாடல் காட்சியும் படமாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. பீஸ்ட் திரைப்படம் முழுக்க முழுக்க ஆக்‌ஷன் அதிரடியில் உருவாகி வருகிறது என்பதும் குறிப்பிட வேண்டிய ஒன்று.

ஆனால் இந்த படத்தில் நாயகியாக நடிக்கும் பூஜாவுக்கு ஆக்சன் காட்சிகள் எதுவும் இல்லையாம். இதனால் அப்செட்டான பூஜா ஹெக்டே நெல்சனிடம் தனக்கு எப்படியாவது ஒரு அதிரடி சண்டைக்காட்சி வைத்து விடுங்கள் என கோரிக்கை வைத்து வருகிறாராம்.

விரைவில் மூன்றாம் கட்ட படப்பிடிப்புகளை முடித்துவிட்டு பீஸ்ட் படக்குழுவினர் ரஷ்யா செல்ல உள்ளார்களாம். விறுவிறுப்பாக உருவாகிவரும் பீஸ்ட் 2022 பொங்கல் வெளியீடாக வெளிவர அதிக வாய்ப்பு இருக்கிறதாம்.