
டோலிவுட் சினிமாவின் முன்னணி நடன இயக்குனர்களில் ஒருவர் தான் டினா சிது. சமீபத்தில் இவர் கோவா சென்றிருந்தார். அங்கு டினா சிதுவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இவரது மரணம் குறித்து சகல நடன இயக்குனர்களும், தெலுங்கு திரையுலக பிரபலங்களும் தங்களது இரங்கல்களை சமூக வலைதளத்தில் தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே நடன இயக்குனர் டினாவின் நெருங்கிய நண்பரான சந்தீப் என்பவர், தனது சமூக வலைத்தளத்தில் டீனாவுடன் இருந்த புகைப்படங்களை பதிவு செய்து தனது இரங்கலை தெரிவித்துள்ளார். அத்துடன் டீனா இறந்த செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்ததாகவும் மிகச்சிறந்த நடன இயக்குனர்களில் ஒருவர் என்றும் அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள் என்றும் சந்தீப் தெரிவித்துள்ளார்.
என்னதான் டினா சிது மாரடைப்பால் உயிரிழந்தார் என்று கூறப்பட்டாலும், இன்னும் அவரது மரணத்திற்கான காரணம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.