மகளின் பிறந்தநாளுக்கு ஒரு லட்சம் பானிபூரி..!

மகளின் முதல் பிறந்தநாளிற்கு ஒரு லட்சம் பானிபூரி இலவசமாக வழங்கி பாராட்டு பெற்றுள்ளார் பானிபூரி வியாபாரி.
பிறந்தநாள்:
இன்றைய காலத்தில் பிறந்தநாள் கொண்டாட்டம் ஒரு பண்டிகை நாள் போல கொண்டாப்படுகிறது. வித்தியாசம் காட்ட வேண்டும் என பல வழிகளை கையில் எடுத்து வருகின்றனர். தாங்கள் செய்யும் தொழில் மூலம் என்ன செய்யமுடியும் என யோசித்த ஒரு பானிபூரி வியாபாரி தனது மகளின் முதல் பிறந்தநாளை வித்தியாசமாக கொண்டாடியுள்ளார்.
21 ஸ்டால்கள்:
மத்திய பிரதேச மாநிலம் போபாலை சேர்ந்தவர் பானிபூரி வியாபாரி ஆன்சல் குப்தா. இவரது மகள் அனோகிக்கு சமீபத்தில் ஒரு வயது பூர்த்தி அடைந்தது. அதை பிரமாண்டமாகக் கொண்டாட முடிவு செய்த குப்தா, போபாலில் உள்ள மைதானத்தில் 21 ஸ்டால்கள் அமைத்து, 1 லட்சத்து ஆயிரம் பானிபூரிகளை இலவசமாக வழங்கியுள்ளார்.
விழிப்புணர்வு வாசகங்கள்:
அந்த மைதானத்தில், பெண் குழந்தைகளை வளருங்கள்; பெண் குழந்தைகளுக்கு கல்வி கற்பியுங்கள் என்ற விழிப்புணர்வு வாசகம் அடங்கிய நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
अनोखी का अनोखा जन्मदिन आप भी बधाई दीजिए.
— Rameshwar Sharma (@rameshwar4111) August 17, 2022
मुखर्जी नगर कोलार में गुप्ता चाट भंडार चलाने वाले भाजपा कार्यकर्ता अंचल गुप्ता ने अपनी बेटी अनोखी गुप्ता के जन्मदिन पर नागरिको को मुफ़्त में 1 लाख फ़ुल्की खिलायी. @narendramodi @ChouhanShivraj @OfficeofSSC pic.twitter.com/WC1gxG79lO
முதலமைச்சர் பாராட்டு:
இந்த நிகழ்ச்சியில், உள்ளூர் எம்.ஏல்.ஏ. ரமேஷ்வர் சர்மா மற்றும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்டு குழந்தைக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி குறித்து அறிந்த மத்திய பிரதேச மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், சமூக வலைதளத்தில் ஆன்சல் குப்பதாவுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.