ஒரே நாளில் நடக்கும் நிகழ்வுகளை - மையமாக கொண்டு உருவாகியிருக்கும் “டி 3” திரைப்படம்!!

அறிமுக இயக்குனர் பாலாஜி இயக்கத்தில் நடிகர் பிரஜின் கதாநாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் “டி 3”.

ஒரே நாளில் நடக்கும் நிகழ்வுகளை - மையமாக கொண்டு உருவாகியிருக்கும்  “டி 3” திரைப்படம்!!

இத்திரைப்படத்தில் நடிகர் பிரஜினுக்கு ஜோடியாக வித்யா பிரதீப் நடித்திருக்கிறார். மேலும் இத்திரைப்படத்தில் சார்லி, வர்கீஸ் மேத்யூ உடன் மோகமுள் அபிசேஷ் உள்ளிட்ட பலரும் முக்கிய வேடத்தில் நடித்திருக்கின்றனர். 

“டி 3” திரைப்படத்தை பீமாஸ் என்டர்டெயின்மெண்ட் சார்பில் மனோஜ் மற்றும் ஜேகேஎம் புரோடக்‌ஷனில் சாமுவேல் காட்சன் ஆகிய இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்துக்கு ஸ்ரீஜித் எடவானா இசையமைத்திருக்கிறார்.

ஒரே நாளில் நடக்கும் கதைகளை அம்சமாக கொண்டு உருவாகி இருக்கும் இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் வெங்கட் பிரபு சமீபத்தில் வெளியிட்டு இருந்தார். 

மேலும் இத்திரைப்படம் குறித்து இயக்குனர் பாலாஜி கூறுகையில், நான் கேள்வி பட்ட உண்மை சம்பவம் பற்றியது, அதே சமயம் இதுவரையிலும் வெளிவராத சம்பவம் பற்றி இந்த கதையை உருவாக்கி இருக்கிறேன் அதனால் படம் ஆரம்பம் முதல் இறுதி வரை சுவாரஸ்யமாக இருக்கும் என்றார். 

இதையடுத்து தெரிவித்த அவர் சென்னையில் இருக்கும் ஒரு பிரபல மருத்துவமனைக்கு ஒரு நாள் வாடகை மட்டுமே இரண்டரை லட்சத்துக்கு இருப்பினும் அதனை செலுத்தி படப்பிடிப்பு நடத்துவதற்காக தயரான நிலையில் தான் இருந்தோம். ஆனால் அன்றைய நாளின் படப்பிடிப்புக்காக ஹைதராபாத்தில் இருந்து சென்னை வந்த நடிகர் வர்கீஸ் மேத்யூவுக்கு விமான நிலையத்திலேயே கோவிட் பாசிடிவ் உறுதியானதால் படப்பிடிப்பு தடையானது.

இதுபோல அனுபவங்கள் பல இருப்பினும் அதனையெல்லாம் கடந்து உருவாக்கப்பட்ட திரைப்படம் தான் டி 3. இப்படம் அனைவரும் பிடித்தமான வகையில் இருக்கும் என நம்புகிறேன் என்றார்.