”முன் இருந்த அனைத்து ரெகார்ட்சையும் அடித்து நொறுக்கியது பீஸ்ட்” - வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

”முன் இருந்த அனைத்து ரெகார்ட்சையும் அடித்து நொறுக்கியது பீஸ்ட்” - வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்து இன்று திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளிவந்த திரைப்படம் தான் பீஸ்ட். இப்படத்தின் மீது ரசிகர்கள் அளவுகடந்த எதிர்பார்ப்பை வைத்திருந்த நிலையில், பீஸ்ட் கலவையான விமர்சனங்களையே பெற்றுவந்துள்ளது.

என்னதான் பீஸ்ட் திரைப்படம் விமர்சன ரீதியாக பின்னடைவை சந்தித்திருந்தாலும் , வசூல் ரீதியாக என்ன நிலையில் உள்ளது என்று இதுவரை தெரியவில்லை.

இந்நிலையில், சன் பிச்சர்ஸ் நிறுவனத்தின் Chief Operating Officer செம்பியன் தனது ட்விட்டர் பக்கத்தில் பீஸ்ட் திரைப்படம் குறித்து பதிவு செய்துள்ளார்.

அதில் 'பீஸ்ட் திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதற்குமுன் உள்ள அனைத்து ரெகார்ட்சையும் அடித்து நொறுக்கியுள்ளது பீஸ்ட் திரைப்படம் அனைவருக்கும் நன்றி' என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தயாரிப்பு தரப்பில் இருந்து இப்படத்தின் வரவேற்பை பற்றி சொல்லியிருக்கும் நிலையில், படத்தின் உண்மையான வசூல் விவரம் நாளை தான் தெரியவரும்.