இந்த முறையும் கிடைக்கலையே.. விக்ரமின் வருத்தம்.. வெட்கப்பட்ட ஐஸ்வர்யா ராய்..!

பொன்னியின் செல்வன் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் விக்ரமின் நகைச்சுவை பேச்சு..!

இந்த முறையும் கிடைக்கலையே.. விக்ரமின் வருத்தம்.. வெட்கப்பட்ட ஐஸ்வர்யா ராய்..!

ஐஸ்வர்யா ராய் இந்தப் படத்திலும் தனக்கு கிடைக்காமல் போனது மிகவும் வருத்தமாக இருப்பதாக நடிகர் விக்ரம் கூறியுள்ளார். 

பொன்னியின் செல்வன்:

தமிழ் சினிமாவில் 70 ஆண்டுகளாக எம்.ஜி.ஆர் தொடங்கி உலக நாயகன் கமல்ஹாசன் வரையிலும் சினிமாவாக எடுக்கத் துடித்தது கல்கியின் பொன்னியின் செல்வன் எனும் நாவலை. ஆனால் யாராலும் அதனை எடுக்க முடியவில்லை. 5 பாகங்கள் கொண்ட ஒரு நாவலை, எப்படி சுருக்கி விவரிப்பது, எத்தனை நடிகர்கள், எத்தனை டெக்னீசியன்களை உருவாக்குவது என பலகட்ட சோதனைகள் இந்த நாவலை படமாக்குவதற்கு இருந்தது. 

2 வருட உழைப்பு:

ஆனால் அத்தனையையும் முடித்து காட்டியிருக்கிறார் இயக்குநர் மணிரத்னம். காதல் படங்களுக்கு பெயர் போன மணிரத்னம் இப்படி ஒரு பெரிய நாவலை படமாக எடுப்பது இதுவே முதன்முறை. கிட்டத்தட்ட 2 வருடங்களுக்கு மேலாக இந்தப் படத்திற்காக அவர் உழைத்திருக்கிறார். 

பான் இந்தியா படம்:

பார்த்திபன், கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், ஜெயம் ரவி, ஜெயராம் என திரையுலகின் முக்கால் வாசி நடிகர்களை ஒரே ஒரு படத்திற்காக ஒன்றிணைத்திருக்கிறார். 2 பாகங்களாக உருவாகியுள்ள படத்தின் முதல் பாகம் வரும் 30ம் தேதி தமிழ், தெலுக்கு, ஹிந்தி, மலையாளம் என பான் இந்தியா படமாக வெளியாகவுள்ளது.

மிகவும் வருத்தம்:

படத்தின் ப்ரோமோஷன் பணிகளுக்காக படக்குழுவினர் ஒவ்வொரு மாநிலமாக சென்று செய்தியாளர்களை சந்தித்து வருகின்றனர். அந்த வகையில், சமீபத்தில் நடந்த ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய நடிகர் விக்ரம், இந்தப் படத்திலும் ஐஸ்வர்யா ராய் தனக்கு கிடைக்காமல் போனது மிகவும் வருத்தமாக இருந்ததாக கூறியிருக்கிறார். 

ராவணன் :

அதாவது இதற்கு முன்னதாக 2010-ம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், ஐஸ்வர்யாராய், ப்ரித்விராஜ் ஆகியோரது நடிப்பில் வெளியான ராவணன் படத்தில் தான் கடத்தி கொண்டு வந்த ஐஸ்வர்யா மீது விக்ரம் காதல் கொள்ள, ஐஸ்வர்யாவின் கணவர், அவரை மீட்டுக் கொண்டு செல்ல, இறுதியில் விக்ரம் இறந்து விடுவது மாதிரியாக கதை கொண்டு செல்லப்பட்டிருக்கும். 

சிரிப்பலையில் மூழ்கிய படக்குழு:

அதேபோல பொன்னியின் செல்வன் படத்தில் கரிகாலனாக நடிக்கும் விக்ரமிற்கு, நந்தினியாக நடித்திருக்கும் ஐஸ்வர்யாராய் காதலியாக இருந்திருப்பார். இறுதியில் வேறொருவருடன் சென்று விடுவார். இதனை வைத்தே விக்ரம் அவ்வாறு நகைச்சுவையாக கூற, அங்கிருந்த அனைவரும் சிரிப்பலையில் மூழ்கினர்.