தன்னை விட சிறப்பான அரசியல் யாராலும் செய்து விட முடியாது - கமல்ஹாசன்

தன்னை விட சிறப்பான அரசியல் யாராலும் செய்து விட முடியாது என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
தன்னை விட சிறப்பான அரசியல் யாராலும் செய்து விட முடியாது - கமல்ஹாசன்
Published on
Updated on
1 min read

மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் Kamals Blood Commune என்ற பெயரில் கமல் ரத்த வங்கி துவக்க விழா ஆழ்வார்பேட்டை கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய கமலஹாசன், சிறையில் இருந்தால் தான் தலைவன் என்பது இல்லை. திரையில் 
இருந்தாலும் தலைவன் தான் என்றார்.

தொடர்ந்து தனது படத்தில் அரசியலும், சமூக சிந்தனையும் வந்து கொண்டே இருக்கும் என்றும், நம்மவர் என்பது தாம் மட்டும் அல்ல  நீங்களும் தான் என்று கூறினார்.

ரத்தம் கொடுத்து உதவும் போது, சாதி, இனம் மறந்து, அண்ணன்- தம்பி என்ற உணர்வு ஏற்படும் என்று கூறிய அவர், ஒரு ஏழையை பணக்காரனாக மாற்றுவது அரசியல் அல்ல,ஏழைகளே இல்லாமல் ஆக்குவது தான் அரசியல் என்று கமல்ஹாசன் தெரிவித்தார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com