நிவேதா பெத்துராஜின் புகார் - ஹோட்டல் மீது அதிரடி நடவடிக்கை

தான் ஆர்டர் செய்த உணவில் கரப்பாபூச்சி இருந்ததாக பிரபல நடிகை நிவேதா பெத்துராஜ் அளித்த புகாரின் பேரில் உணவு சப்ளை செய்த ஹோட்டல் மீது அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.

நிவேதா பெத்துராஜின் புகார் - ஹோட்டல் மீது அதிரடி நடவடிக்கை

ஒருநாள் கூத்து, டிக் டிக் டிக், சங்கத்தமிழன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நிவேதா பெத்துராஜ். இவர் ஸ்விகி செயலி மூலம் பிரபல உணவகம் ஒன்றில் சாப்பாடு ஆர்டர் செய்ததாகவும், அங்கிருந்து டெலிவரி செய்யப்பட்ட உணவில், கரப்பான்பூச்சி இருந்ததாகவும் தனது சமூகவலைத்தளபக்கத்தில் பதிவு செய்து இருந்தார்.   

இந்நிலையில் நிவேதாவின் புகார் அடிப்படையில், உணவு சப்ளை செய்த moonlight take away என்ற ஹோட்டல் செயல்படுவதற்கு தற்காலிகமாக தடை விதித்து, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.  

3 நாட்களுக்குள் குறைகளை நிவர்த்தி செய்து புகைப்பட ஆதாரங்களை சமர்ப்பிக்கவும் ஓட்டலுக்கு உத்தரவு விடப்பட்டுள்ளது.