நில்லு டா திமிர திமிர நில்லுடா.. 2டி எண்டெர்டெயின்மெண்ட் வெளியிட்ட சூர்யா-ஜோதிகா வீடியோ..!

68-வது தேசிய திரைப்பட விழாவில் விருதுகளை வாங்கிய க்யூட் ஜோடி..!

நில்லு டா திமிர திமிர நில்லுடா.. 2டி எண்டெர்டெயின்மெண்ட் வெளியிட்ட சூர்யா-ஜோதிகா வீடியோ..!

தேசிய திரைப்பட விருதுகள்:

68வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நேற்று டெல்லியில் நடைபெற்றது. இந்திய சினிமாவை பொருத்தவரை தேசிய திரைப்பட விருது என்பது நாடளவில் கிடைக்கும் ஒரு அங்கீகாரம் என்பதால், வருடாவருடம் இந்த விருதுகள் யாருக்கு கிடைக்கும் என்ற ஆவல் ரசிகர்கள் மத்தியில் எழும். 

கொரோனாவால் தள்ளிப்போன விருதுகள்:

ஒட்டுமொத்த இந்திய சினிமா படைப்புகளில் இருந்து பல துறைகளின் கீழ் இந்த விருதுகள் வழங்கப்படுகிறது. அந்த வகையில் கடந்த 2020-ம் ஆண்டிற்கான 68வது தேசிய விருதுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. கொரோனா ஊரடங்கால் கடந்த வருடம் இந்த விருது வழங்கும் விழா நடைபெறாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது. 

5 விருதுகளை குவித்த சூரரைப் போற்று:

அவ்வாறு அறிவிக்கப்பட்ட விருதுகளில் தமிழ் சினிமாவில் சுதா கொங்கரா இயக்கத்தில் 2டி எண்டெர்டயின்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் சூர்யா, அபர்ணா பால முரளி நடிப்பில் வெளியான சூரரைப் போற்று திரைப்படம் 5 விருதுகளை குவித்திருந்தது. 

சூர்யா, ஜோதிகாவுக்கு விருது:

அதில் சூர்யா சிறந்த நடிக்கருக்காகவும், அபர்ணா சிறந்த நடிகைக்காகவும் விருதுகளை பெறுவதாக அறிவிக்கப்பட்டது. அதேபோல சிறந்த இயக்குநர், சிறந்த தயாரிப்பாளர், சிறந்த இசையமைப்பாளர் என 5 விருதுகளைஅள்ளியது சூரரைப் போற்று திரைப்படம். 

புகைப்படங்கள் வைரல்:

நேற்று டெல்லியில் நடைபெற்ற 68-வது தேசிய விருதுகள் வழங்கும் விழாவில், சூர்யா சிறந்த நடிகருக்கான விருதினையும், ஜோதிகா சிறந்த தயாரிப்பாளருக்கான விருதினையும் பெற்றனர். தம்பதிகளாக இவர்கள் இருவரும் ஒருவர் மாறி ஒருவர் புகைப்படம் எடுத்துக் கொண்டதும், பின்பு குடும்பத்தினருடன் இருவரும் எடுத்துக் கொண்ட புகைப்படமும் இணையத்தில் தீயாய் பரவியது. 

புதிய வீடியோ:

இந்த நிலையில், தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை 2டி எண்டர்டெயிண்ட்மெண்ட் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அதில், டெல்லி சென்றதில் இருந்து இருவரும் விருதுகளை வாங்கியது முதல் சூரரை போற்று படத்தின் பின்னணி இசையோடு இடம் பெற்றுள்ளது. இதற்கு ரசிகர்கள் தங்களது லைக்ஸ்களையும், பாராட்டுகளையும் குவித்து வருகின்றனர்.