தளபதி 67 க்கு அடுத்தது கைதி 2 தான்!- கார்த்தி உறுதி!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்போது தளபதீ 67 எழுதப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அடுத்த படம் கைதி 2 தான் என ல்கார்த்தி உறுதி அளித்துள்ளார்.

தளபதி 67 க்கு அடுத்தது கைதி 2 தான்!- கார்த்தி உறுதி!

இயக்குனர் லோகேஷ் விஜயுடன் படம் முடித்த பிறகு கைதி 2 எடுக்கப்படும் என நடிகர் கார்த்தி கூறியுள்ளார். 

கைதி 2 படபிடிப்பு எப்போது தொடங்கும் என பலரும் எதிர்பார்த்த நிலையில் அதற்கான பதிலை நடிகர் கார்த்தி சமீபத்தில் நடந்த விருமன் படத்திற்கான செய்தியாளர் சந்திப்பில் பேசியுள்ளார்.

நடிகர் கார்த்தி நடிப்பில் கடந்த 2019 ம் ஆண்டு வெளியான திரைப்படம் கைதி. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. எஸ். ஆர் பிரகாஷ் பாபு தயாரித்த இந்த படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்திருந்தார். அதிரடி படமாக உருவாகிய இந்த படத்தில் தில்லி கதாபாத்திரத்தில் நடித்த கார்த்தி, போதை பொருள் கடத்தல் கும்பலால் எதிர்கொள்ளும் பிரச்சனையை மையமாக கொண்டு இந்த திரைப்படம் உருவானது.

Yuvan Shankar Raja's Kanja Poovu Kannala From Viruman Gets 20 Mn Views

இந்நிலையில், சமீபத்தில் கார்த்தி மற்றும் அதிதி ஷங்கர் நடிப்பில் வெளியாக காத்திருக்கும் படமான விருமன் படத்திற்கான ப்ர்மோஷன் வேலைகள் படு பயங்கரமாக நடந்து வருகிறது. அதில் பேசிய கார்த்தி, லோகேஷ் கனகராஜ் குறித்தும் பல கருத்துகாளைக் கூறினார்.

அப்போது பேசிய அவர், “லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் தளபதி 67 படத்திற்கு பிறகு அடுத்தது கைதி 2 தான்” என்று உறுதியளித்துள்ளார்.

ஏற்கனவே விக்ரம் படத்தின் 3ம் பாகத்தில், ரோலெக்ஸ் கதாபாத்திரத்தில் நடிகர் சூரியா, விக்ரம் கதாபாத்திரத்தில் நடிகர் கமல் மற்றும் தில்லி கதாபாத்திரத்தில் நடிகர் கார்த்தி ஆகியோர் இணைந்து ஒரு மாபெரும் ஆக்‌ஷன் ஹிட் படமாக உருவாக இருப்பதாகத் தகவல்கள் அதிகாரப்பூர்வமாக வெளியானதை அடுத்து, கார்த்தி கூறிய இந்த் அதகவல் தற்போது இணையத்தில் படு பயங்கரமாக பகிரப்பட்டு வருகிறது.

மேலும், வருகிற செப்டம்பர் 30ம் தேதி பன்மொழி படமாக, பிரபல கல்கியின் படைப்பான பொன்னியின் செல்வன் கதை, மணி ரத்னம் இயக்கத்தில் படமாக அதன் முதல் பகம் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இதில், கைதி 2 படம் குறித்த தகவலால், ரசிகர்கள் அனைவரும் படு குஷியில் உள்ளஹு குறிப்பிடத்தக்கது.