“தளபதி 66” படத்தின் புதிய அப்டேட்டை - போஸ்டருடன் வெளியிட்ட படக்குழு..!!

தளபதி 66 படத்தினுடைய புதிய அப்டேட்டை வெளியிட்டிருக்கின்றனர் படக்குழு. 

 “தளபதி 66” படத்தின் புதிய அப்டேட்டை - போஸ்டருடன் வெளியிட்ட படக்குழு..!!

பீஸ்ட் படத்தை தொடர்ந்து தோழா போன்ற பல வெற்றி படங்களை இயக்கிய வம்சி பைடிப்பள்ளி இயக்கும் படத்தில் தற்போது நடிகர் விஜய் நடித்து வருகிறார். தளபதி 66 என பெயரிடப்பட்டிருக்கும் இந்த படமானது தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக இருக்கிறது.

இத்திரைப்படத்தை பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சரத்குமார் நடித்து வருகிறார். மேலும் இப்படமானது நடிகர் விஜய்யின் ஆரம்பக் கட்டத்தில் வெளியான பூவே உனக்காக காதலுக்கு மரியாதை போன்ற குடும்ப பின்னணி படமாக இருக்கும் என்கின்றனர். 

இப்படத்தின் படப்பிடிப்புகள் ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இதன் இடையில்  தளபதி 66 க்கான புதிய அப்டேட்டை வெளியிட்டிருக்கின்றனர். இத்திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் நிறைவடைந்துள்ளதாகவும் விரைவில் அடுத்த கட்ட படப்பிடிப்புகள் தொடங்க இருப்பதாகவும் தெரியப்படுத்தி அதனுடன் படத்தின் புதிய போஸ்டர் ஒருன்றுடன் வெளியிட்டுள்ளனர் படத்தின் தயாரிப்பு நிறுவனம் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் அறிவித்திருக்கிறது.