புதிய சாதனை படைத்த ’ரவுடி பேபி’ பாடல்!

தனுஷ் சாய் பல்லவி நடிப்பில் வெளிவந்த ‘மாரி 2’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘ரவுடி பேபி’பாடல் யூடியூபில் 5 மில்லியன் லைக்குகளை பெற்று புதிய சாதனை படைத்துள்ளது.

புதிய சாதனை படைத்த ’ரவுடி பேபி’ பாடல்!

தனுஷ் சாய் பல்லவி நடிப்பில் வெளிவந்த ‘மாரி 2’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘ரவுடி பேபி’பாடல் யூடியூபில் 5 மில்லியன் லைக்குகளை பெற்று புதிய சாதனை படைத்துள்ளது.

தனுஷ், சாய்பல்லவி, நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான படம் ‘மாரி 2’. யுவன் சங்கர் ராஜா இசையில் வெளியான இந்த படத்தின் பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக இதில் தனுஷ் எழுதி பாடி இருந்த ‘ரவுடி பேபி’ பாடல் மிகப்பெரிய அளவில் ஹிட்டானது. 
இந்த பாடலுக்கு பிரபு தேவா நடனம் அமைத்திருந்த நிலையில், தனுஷ், சாய் பல்லவியின் நடனம் ரசிகர்களை கவரும் வண்ணம் அமைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில்,‘யூடியூப்’பில் வெளியிடப்பட்ட ரவுடி பேபி பாடலின் வீடியோ தற்போது 5 மில்லியன் லைக்குகளை பெற்று புதிய சாதனை படைத்துள்ளது. இதுவரையில் தென்னிந்திய அளவில் வெளியான பாடல்களில் 5 மில்லியன் லைக்குகளை பெற்ற முதல் பாடல் ’ரவுடி பேபி’ பாடல் என்பது குறிப்பிடத்தக்கது. இப்பாடல் யூடியூபில் இதுவரை 118 கோடி பார்வையாளர்களை பெற்றுள்ளது.