போஸ்டரில் தலையை எடுத்து ஒட்ட வச்சிருக்கிங்களா! பொன்னியின் செல்வன் படக்குழுவை விமர்சித்து தள்ளும் நெட்டிசன்கள்..

போஸ்டரில் தலையை எடுத்து ஒட்ட வச்சிருக்கிங்களா! பொன்னியின் செல்வன் படக்குழுவை விமர்சித்து தள்ளும் நெட்டிசன்கள்..

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் தான் இயக்குனர் மணிரத்னம். இவரது இயக்கத்தில் அதுவும் ஏகப்பட்ட முன்னணி நட்சத்திர பட்டாளங்களை கொண்டு உருவாகி வரும் திரைப்படம் தான் பொன்னியின் செல்வன். மக்கள் மத்தியில் மிகுந்த எதிர்ப்பார்ப்பை உருவாக்கியிருக்கும் இந்த திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகி வருகிறது. 

இந்நிலையில் பெரிதும் எதிர்ப்பார்க்கபட்ட இப்படத்தின் கதாபாத்திரங்களின் அறிவிப்பை நேற்று படக்குழு போஸ்டர்களுடன் வெளியிட்டு இருந்தது. அதுமட்டுமில்லாமல் இந்த படத்தின் முதல் பாகம் வருகின்ற செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர்.

இதனையடுத்து நேற்று வெளியான கதாபாத்திரங்களின் போஸ்டர்கள் இணையத்தில் வைரலானது. ஆனால் அந்த போஸ்டரில் அனைத்தும் சரியாக இருந்த நிலையில் விக்ரமின் போஸ்டர் மட்டும் முகத்தை எடுத்து ஒட்டி வைத்தது போல் உள்ளது. இதை கண்ட நெட்டிசன்கள் பல்வேறு விதமாக அந்த போஸ்ட்டரை விமர்சித்து வருகின்றனர்.