நெட்ஃபிக்ஸில் வெளியான “தி பிக் லிட்டில் மர்டர்” ஆவணப் படம் - ஒளிபரப்புக்கு டெல்லி உயர்நீதிமன்றம் தடை

நெட்ஃபிக்ஸ் ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளத்தில் ’தி பிக் லிட்டில் மர்டர்’ என்ற ஆவணப்படத்தை ஒளிப்பரப்ப டெல்லி உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

நெட்ஃபிக்ஸில் வெளியான “தி பிக் லிட்டில் மர்டர்” ஆவணப் படம் - ஒளிபரப்புக்கு டெல்லி உயர்நீதிமன்றம் தடை

குருகிராமில் உள்ள ரியான் சர்வதேச பள்ளியின் கழிவறையில் 7 வயது சிறுவன் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் ஆவணப்படமாக்கப்பட்டு நெட்ஃபிக்ஸ் ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளத்தில் கடந்த 6 ஆம் தேதி முதல் ஒளிப்பரப்பப்பட்டு வருகிறது.

இதில் ரியான் சர்வதேச பள்ளியை அடையாளப்படுத்தும் குறிப்புகள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

இதனை எதிர்த்து பள்ளியின் நிர்வாகம் தரப்பில் ஆவணப்படத்தை ஒளிப்பரப்ப உடனடியாக தடை விதிக்க கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதனை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் ”தி பிக் லிட்டில் மர்டர்” என்ற ஆவணப்படத்தை ஒளிப்பரப்ப தடை விதித்ததுடன் பள்ளியை அடையாளப்படுத்தும் குறிப்புகள் அகற்றப்பட்டால் மட்டுமே மீண்டும் ஒளிபரப்பு செய்ய முடியும் என்றும் உத்தரவிட்டுள்ளனர்.