திருப்பதியில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் தரிசனம்!! வைரல் வீடியோ

திருப்பதியில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் தரிசனம்!! வைரல் வீடியோ

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நயன்தாரா. கோலிவுட் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டாரான நயன்தாரா  இயக்குநர் விக்னேஷ் சிவனை பல வருடங்களாக காதலித்து வருகிறார். 

இவர்கள் எங்கு சென்றாலும் அவர்களிடம் அனைவரும் கேட்கும் ஒரே கேள்வி உங்களுக்கு திருமணம் எப்போது என்பதுதான். அந்த அளவிற்கு நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணத்தை எதிர்நோக்கி அவரது ரசிகர்களில் பெரும்பாலானவர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

இந்த சூழலில் நடிகை நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஜோடி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் மேற்கொண்டுள்ளனர். 

இன்று காலை விஐபி தரிசனத்தின் திருப்பதி ஏழுமலையானை தரிசித்த அவர்கள், கோவிலுக்கு வெளியே வந்தவுடன் ரசிகர்கள் ஆவலுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.