நயன்தாரா மெகந்தியில் என்ன பெயர் இருக்கிறது; உற்றுப் பார்த்து கருத்து பதிவிடும் நெட்டிசன்கள்..!

 நயன்தாரா மெகந்தியில் என்ன பெயர் இருக்கிறது; உற்றுப் பார்த்து கருத்து பதிவிடும் நெட்டிசன்கள்..!

நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணம் நல்லபடியாக முடிந்த நிலையில், அவர்களது திருமண நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட போட்டோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த நிலையில், அவரது கையில் இடப்பட்ட மருதாணியில் இருக்கும் எழுத்துகள் என்ன என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி பதிவிட்டு வருகின்றனர்.

6 வருட காதல் திருமணமாக வெற்றி பெற்று இன்று விக்கி நயன் ஜோடி, தங்களது வாழ்க்கையின் புதிய பாதையை நோக்கி நகர்ந்துள்ளனர். நானும் ரௌடி தான் என்ற படம் மூலம் தொடங்கிய விக்கி நயன் காதல், இன்று திருமண கோலத்தில் அழகாக ரசிகர்களுக்கு தரிசனம் கொடுக்கிறது.

மகாபலிப்புரத்தில் Sheraton Grand என்ற நட்சத்திர ஹோட்டலில் திருமணம் வெகு விமரிசையாக நடந்தது. அதில், தயாரிப்பாளர் போனி கபூர், ஷாருக்கான் போன்ற பாலிவுட் பிரபலங்களுடன், தென்னிந்திய பிரபலங்களான, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விஜய், சூர்யா, மனைவியுடன் விக்ரம் பிரபு, ஷாலினி தங்கை ஷாமிலி, பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் டிடி, சர்ச்சைக்குறிய மலையாள நடிகர் திலீப், இயக்குனர்கள் கே எஸ் ரவிக்குமார், ஆனந்த ஷங்கர், சிவா, ஹரி, மணி ரத்னம் போன்ற பலரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து திருமண வைபோகத்தை கலைக்கட்டினர்.

இதன் போட்டோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வர, சிவப்பு நிற புடவையில், பச்சை மற்றும் வெள்ளை கற்கள் பொருந்திய நகைகளை அணிந்து மிக அழகாக இருக்கும் நயனை அனைவரும் புகழ்ந்து பதிவிட்டு வருகின்றனர். அதில் ஒரு சில நெட்டிசன்கள், நயன்தாராவின் கைகளில் இருக்கும் மெகந்தியை நோட்டம் விட்டு அதில் இருக்கும் எழுத்துகள் குறித்து கேள்விகள் எழுப்பி வருகின்றனர்.

தனது இரண்டு கைகளிலும், அழகான மெகந்தி வரைந்த நயன்தாரா, ஆங்கில எழுத்துகளில் VM என எழுதியிருக்கிறார். அதனைக் கூர்ந்து பார்க்கையில், அதில் வி என்பது விக்னேஷ் சிவனைக் குறிப்பது தெரிகிறது. ஆனால், M யாரை குறிக்கிறது என்ற கேள்வி உலாவி வருகிறது.

மலையாள தேசத்தில் Diana Mariam Kurian எனப் பெயரிடப்பட்ட லேடி சூப்பர் ஸ்டார், திரையுலத்திற்காக நயன்தாரா என தனது பெயரை மாற்றி அமைத்தது அனைவரும் அறிந்ததே. ஆனால், இன்றும் நயனின் வீட்டில் மரியம் என்று தான் அழைக்கின்றனர் என்பது ஒரு சில நம்பத் தகுந்த வட்டாரத்தின் கருத்தாக இருக்கிறது. அதனால், தான் அவர் தனது மெகந்தியில், விக்கி மரியம் என்பதை குறிக்க VM என வரைந்திருக்கிறாரோ என நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.