நயன்தாரா-விக்னேஷ்சிவன் திருமணம் தேதி குறிப்பு?

’லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா விக்னேஷ்வரனுடனான திருமணத்துக்கு ஓகே சொன்னதாக மலையாள ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகிறது.

நயன்தாரா-விக்னேஷ்சிவன் திருமணம் தேதி குறிப்பு?

தென்னிந்திய மொழி படங்களில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா.  கடந்த 2015-ம் ஆண்டு நானும் ரவுடிதான் படத்தில் நடித்தபோது நடிகை நயனுக்கும்,அப்படத்தில் அறிமுக இயக்குனராக வலம் வந்த விக்னேஷ் சிவனுக்கும் இடையே காதல் மலர்ந்தது. சுமார் 6 வருடங்களாக காதலித்து வரும் இவர்கள், விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில், நடிகை நயன்தாரா குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் உடனடியாக திருமணம் செய்து கொள்ளும்படி நயன்தாராவை குடும்பத்தினர் வற்புறுத்துவதாகவும், அவர்களது நிர்ப்பந்தம் காரணமாக நயன்தாராவும் திருமணத்துக்கு சம்மதித்து விட்டதாகவும் மலையாள ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளது. இதனால் அடுத்த சில மாதங்களில் நயன்தாரா திருமணம் நடக்கும் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படும் நிலையில், நயன் தற்போது அண்ணாத்த, நெற்றிக்கண், காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களை கைவசம் வைத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.