நயன் - விக்கி திருமணத்தில் நயனுக்கு ஒரு ரூபாய் கூட செலவில்லையா? அதற்கு பதில் 25 கோடி வருமானமா?

மிக பிரம்மாண்டமாக நடைபெற்ற நயன் - விக்கி திருமணத்திற்கு ஒரு ரூபாய் கூட நயனுக்கு செலவு இல்லை என்றும், அதற்கு பதிலாக அவருக்கு 25 கோடி வருமானம் தான் கிடைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

நயன் - விக்கி திருமணத்தில் நயனுக்கு ஒரு ரூபாய் கூட செலவில்லையா? அதற்கு பதில் 25 கோடி வருமானமா?

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்கும் நயன்தாரா, தன்னிடம் கதை சொல்ல வந்த விக்னேஷ் சிவனிடம் காதலில் விழுந்து, இருவரும் கடந்த 7 வருடங்களாக லிவ்விங் டூ கெதரில் வாழ்ந்து வந்தனர். இவர்களுடைய 7 வருட காதல் தற்போது திருமணத்தில் முடிந்ததுள்ளது. 

சென்னை அருகே மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் திரைபிரபலங்கள் மத்தியில் கோலாகலமாக நடைபெற்றது. இதனிடையே நட்சத்திர ஓட்டலில் உள்ள அனைத்து அறைகளையும் தன் திருமணத்திற்கு வரும் விருந்தினர்களுக்காக புக் செய்துவிட்டார். அதுமட்டுமில்லாமல் தன்னுடைய திருமணத்திற்காக வங்க கடலின் ஓரத்தில் ஒரு கண்ணாடி மாளிகை போன்ற செட்டை அமைத்து அதற்குள் திருமணம் உள்ளிட்ட அனைத்து சடங்குகளையும் நடத்தினார். மேலும் திருமணத்திற்கு வந்த விருந்தினர்களுக்கு ஒரு நபருக்கு 3500 ரூபாய் மதிப்புள்ள கேரளா உணவு வகைகளையும் விருந்துதோம்பல் அளித்தார். அதே சமயம்  மும்பையில் இருந்து வரவழைக்கப்பட்ட மேக்கப் மேன்கள் மற்றும் பாதுகாப்பு காவலர்கள் என கோடிக்கணக்கில் செலவானதாக கூறப்படுகிறது. 

ஆனால், இந்த மொத்த செலவையும் நெட்பிளிக்ஸ் நிறுவனம் ஏற்று கொண்டது என்றும், மேலும் கூடுதலாக அந்நிறுவனம் நயன்தாரவுக்கு 25 கோடி கொடுத்திருப்பதாகவும் தகவல் வெளிவந்துள்ளது. அதற்கு காரணம் நயனின் திருமணத்தை முழுவதுமாக வீடியோ எடுத்து தன்னுடைய ஓடிடி தளத்தில் வெளியிடும் உரிமையை பெற்றுள்ளனர். 

இதன் காரணமாக தான் நயன்தாராவுக்கு தன் திருமணத்தில் ஒரு ரூபாய் கூட செலவாகவில்லை என்றும், அதே சமயம் அவருக்கு 25 கோடி வருமானம் தான் என்றும் நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.