நட்டியின் வித்தியாசமான நடிப்பில் வெளியானது பயங்கரமான ‘வெப்’ டீசர்:

நட்டியின் வித்தியாசமான நடிப்பில் வெளியானது  பயங்கரமான ‘வெப்’ டீசர்:
Published on
Updated on
1 min read

இந்திய சினிமாவின் குறிப்பிடத்தக்க ஒளிப்பதிவாளர்களில் ஒருவராகவும், பல சூப்பர் ஹிட் படங்களுக்கு ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றிய நட்டி என்கிற நடராஜன், தற்போது தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகனாகவும், வில்லனாகவும் நடித்ததோடு, மிக முக்கிய வேடங்களிலும் நடித்து தமிழக மக்களின் இதயங்களில் இடம்பிடித்துள்ளார்.

மிளகா, சதுரங்க வேட்டை, நம்ம வீட்டு பிள்ளை, வால்டர் போன்ற படங்களில் நல்ல கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நட்டி, கடைசியாக தனுஷின் மெகா ஹிட் படமான கர்ணன் படத்தில் மிரட்டலான வில்லனாக நடித்தார். மேலும் அவரது நடிப்பில் “சம்பவம்”, “இன்ஃபினிட்டி” போன்ற படங்கள் அடுத்தடுத்து தயாராகி வருகின்றன.

இந்த வரிசையில் நட்டியின் அடுத்த படம் 'வெப்'. ஹாரூன் இயக்கிய, திரில்லர் படமான இதில், காளி, இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் ஆகிய படங்களில் நடித்த ஷில்பா மஞ்சுநாத் கதாநாயகியாக நடிக்கிறார், மேலும் வில்லன் மற்றும் நகைச்சுவை நடிகரான மொட்டை ராஜேந்திரன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

வேலன் புரொடக்ஷன்ஸ் சார்பில் வி.எம்.முனிவேலன் தயாரித்துள்ள இந்த வெப் படத்திற்கு கிறிஸ்டோபர் ஜோசப் ஒளிப்பதிவு செய்ய கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார். இந்நிலையில் சற்றுமுன் இந்த வெப் படத்தின் விறுவிறுப்பான டீசர் வெளியானது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com