தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா... டெல்லிக்கு படையெடுத்த தமிழ் திரையுலகினர்... 

67 வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் இன்று நடைபெறுகிறது.

தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா... டெல்லிக்கு படையெடுத்த தமிழ் திரையுலகினர்... 

2019 ம் ஆண்டுக்கான 67 வது தேசிய திரைப்பட விருதுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், இதற்கான விழா இன்று டெல்லியில் நடைபெறுகிறது.  குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் விருதுகளை வழங்குகிறார்.

சிறந்த தமிழ் படத்திற்கான விருதை இயக்குனர் வெற்றிமாறன் இயக்கிய அசுரன் படம் பெறும் நிலையில், இதில் நடித்ததற்காக தனுஷ் சிறந்த நடிகருக்கான விருதை பெறுகிறார்.

சிறந்த துணை நடிகருக்கான விருது சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்த விஜய் சேதுபதிக்கு வழங்கப்படும் நிலையில், சிறந்த இசை அமைப்பாளருக்கான விருதை விஸ்வாசம் படத்துக்காக டி.இமான் பெறுகிறார்.

இதேபோல், பார்த்திபன் இயக்கிய ஒத்த செருப்பு திரைப்படத்திற்கு இரண்டு விருதுகளும் வழங்கப்படுகிறது. சிறப்பு திரைப்படத்துக்கான விருது மற்றும் ஒத்த சிறந்த ஒலிக்கலவைக்கான விருது வழங்கப்படுகிறது.

சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான விருது கருப்புதுரை படத்தில் நடித்த நாகவிஷாலுக்கும் வழங்கப்படுகிறது.

மேலும் திரையுலகில் பல்வேறு சாதனைகள் படைத்த நடிகர் ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே விருதும் வழங்கப்பட உள்ளது. இதற்காக இன்று ரஜினிகாந்த் டெல்லி புறப்பட்டு சென்றார். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், தாதா சாகிப் பால்கே விருது வாங்குவது மகிழ்ச்சி அளிப்பதாகவும், இந்த தருணத்தில் கே.பாலசந்தர் இல்லையே என்பது வருத்தமாக உள்ளது என தெரிவித்தார்.