கார்த்திக் நரேன்- தனுஷ் கூட்டணியின் 'D43' பட தலைப்பு இதுதானா..?

கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும்  'D43'  படத்திற்கு மாறன் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

கார்த்திக் நரேன்- தனுஷ் கூட்டணியின் 'D43' பட தலைப்பு இதுதானா..?

கார்த்திக் நரேன் இயக்கத்தில் தற்போது தனுஷ் புதிய படத்தில் நடித்து வருகிறார். அந்தப் படத்திற்கு D43 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. நடிகை மாளவிகா மோகனன் அந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். 

ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்தில் தனுஷ் பாடல் வரிகள் எழுதியுள்ளதாகவும் பாடல் பாட இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்தப் படத்தில் தனுஷ் மற்றும் மாளவிகா இருவரும் பத்திரிகை நிருபர்களாக நடித்து வருவதாகக் கூறப்படுகிறது. இப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

இன்று தனுஷ் தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அதையடுத்து அவருக்கு திரைத்துறை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு D43 படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்திருந்தனர். 11 மணிக்கு பர்ஸ்ட் லுக் வெளியாக உள்ளது.