கருவை சுமக்கும் நமீதா.. அதுவும் 41 வயதில்.. குவியும் வாழ்த்துக்கள்!!

நான் விரும்பியதெல்லாம் நீ தான், உனக்காக இவ்வளவு  நாள் வேண்டினேன் என நமீதா கூறியுள்ளார்.

கருவை சுமக்கும் நமீதா.. அதுவும் 41 வயதில்.. குவியும் வாழ்த்துக்கள்!!

தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக வளம் வந்தவர் நடிகை நமீதா. பல முன்னணி நடிகர்களுடன் நடித்த வந்த நமீதா, ஒரு கட்டத்தில் உடல் எடை அதிகரித்து ஆளே அடையாளம் தெரியாமல் மாறினார். மன அழுத்தத்தால் உடல் இப்படி மாறியதாக நமீதா குறிப்பிட்டிருந்தார்.

கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நமீதா, பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்ததும் தனது காதலர் வீரேந்திர சவுத்ரி என்பவரை மணந்து கொண்டார்.

இந்நிலையில், நமீதா தற்போது கர்ப்பமாக இருப்பதாக தனது பிறந்தநாளில் அறிவித்துள்ளார். அதில், "தாய்மை.. புதிய அத்தியாயம் தொடங்கியதும், நான் மாறினேன், என்னுள் ஏதோ மாறியது, மிகவும் மென்மையாக... பிரகாசமான மஞ்சள் சூரியன் என் மீது பிரகாசிக்கும்போது, ​​புதிய வாழ்க்கை, புதிய உயிர் என்னை அழைத்தது.

நான் விரும்பியதெல்லாம் நீ தான், உனக்காக இவ்வளவு  நாள் வேண்டினேன். உன் மென்மையான உதைகள் மற்றும்  உன் படபடப்புகள், அவை அனைத்தையும் என்னால் உணர முடிகிறது.நான் இதுவரை இல்லாத ஒன்றாக என்னை நீ உருவாக்குகிறாய்" என குறிப்பிட்டு இந்த மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்துகொண்டார்.

நமீதா இது குறித்த புகைப்படத்தை பகிர்த்ததும். ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.