சமந்தா DIVORCE குறித்து முதன்முறையாக வாய் திறந்த நாகசைதன்யா!!

”நாங்க ரெண்டு பேரும் பிரிஞ்சு இருக்கிறதுல ஒரு கவலையும் இல்ல”

சமந்தா DIVORCE குறித்து முதன்முறையாக வாய் திறந்த நாகசைதன்யா!!

கோலிவுட்டிலும், டோலிவுட்டிலும் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நடிகை சமந்தா தமிழில்   ‘பாணாக்காத்தாடி “ படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.  இதனைத்தொடர்ந்து, நான் ஈ, நீதானே என் பொன்வசந்தம், 24, அஞ்சான், கத்தி, தெறி போன்ற படங்களில் முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்து தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்  பிடித்தார்.

இதனையடுத்து, தெலுங்கு பிரபலம் நாகர்ஜூனாவின் மகன் நாகசைதன்யாவை நடிகை சமந்தா காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். ஆனால் திருமணத்திற்கு பிறகு சமந்தா நடிப்பில் கவனம் செலுத்தமாட்டார் என்று நினைத்திருந்த நிலையில், யாரும் எதிர்பாராத வகையில் அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி   நடிக்க தொடங்கினார். அதுமட்டுமில்லாமல் வெப்சீரிஸிலும் கவனம் செலுத்த தொடங்கிய நடிகை சமந்தா தி ஃபேமிலி மேன் 2 வெப்சீரிஸில் படு கவர்ச்சியாக நடித்திருந்தார். இதற்கு பிறகு நடிகை சமந்தாக்கும் , நாகசைதன்யாவுக்கும்  இடையில் ஏற்பட்ட மனவேறுபாடு காரணமாக தங்களது 4 வருட காதல் திருமணத்தை முடித்துக்கொண்டனர்.

இவர்களின் இந்த முடிவு ரசிகர்களிடையே பெரும் சர்ச்சையை  ஏற்படுத்தியதால் கோலிவுட்டிலும், டோலிவுட்டிலும்  பல்வேறு காரணங்களை முன்வைத்து கிசுகிசுக்க தொடங்கினர். அவர்கள் இருவரும் எங்கு சென்றாலும் இந்த கேள்வியே அவர்களிடம் முன் வைக்கப்பட்டது.

சமந்தா தைரியமாக அவர்களின் கேள்விக்கு எங்களுக்கு செட் ஆகல அதுனால தான் பிரிஞ்சுட்டோம்  என்று கூறிவந்தார். ஆனால் இதுவரைக்கும் இது பற்றி வாய்திறக்காத நடிகர் சைதன்யா தற்போது இது குறித்து பேசிருக்கிறார். அது என்னன்னா, ‘நாங்க ரெண்டு பேரும் பிரிஞ்சு இருக்கிறதுல ஒரு கவலையும் இல்ல, ஏன்னா நாங்க  தனி தனியா இருக்குறப்போ தான் சந்தோஷமா இருக்கு, சமந்தா சந்தோஷமா இருந்தா நானும் சந்தோஷமா இருப்பேன்’  இவ்வாறு அவர் கூறியிருக்கிறார். சமந்தா, நாகசைதன்யா இருவரும் என்னதான் ஒரே காரணத்தை சொன்னாலும் ஒரு நல்ல ஜோடி பிரிந்தது ரசிகர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்திதான் இருக்கிறது.