முதலில் டைவர்ஸ் கேட்டது சமந்தா தான்... உண்மையை உடைத்த நாகர்ஜுனா

முதலில் டைவர்ஸ் கேட்டது சமந்தா தான்... உண்மையை உடைத்த நாகர்ஜுனா

கடந்த 2017 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்ட நாக சைதன்யாவும் சமந்தாவும் தங்களின் மணவாழ்கையை முடித்து கொள்வதாக அறிவித்தனர். 

திடீரென வெளியான இந்த அறிவிப்பு ரசிகர்களையும், பிரபலங்களையும் சோகத்தில் ஆழ்த்தியது. பிரிவு குறித்து பல 
பல்வேறு காரணங்கள் சமூகவலைத்தளங்களில் உலா வந்தன. இதற்கு சமந்தா எதிர்ப்பு தெரிவித்தாரே தவிர விவாகரத்து குறித்து எந்த பதிலும் அளிக்கவில்லை.

சில நாட்களுக்கு முன் நடிகை சமந்தா தனது சமூக வலைதள பக்கங்களில் இருந்து நாக சைதன்யாவை பிரிவதாக அறிவித்திருந்த பதிவை நீக்கினார். இதனையடுத்து இருவரும் மீண்டும் சேர போகிறார்கள் என ரசிகர்கள் சந்தோசமடைந்தனர்.

இந்த நிலையில் நாக சைதன்யாவின் அப்பாவும் பிரபல தெலுங்கு நடிகருமான நாகர்ஜுனா சமீபத்தில் ஒரு பேட்டியில், ''சமந்தாதான் முதலில் விவாகரத்துக்கு விண்ணப்பித்தது'' என்று தெரிவித்தார்.

மேலும் கடந்த புத்தாண்டை நாங்கள் மகிழ்ச்சியாக தான் கொண்டாடினோம். ஆனால் அவர்களுக்கு பிரச்னை எப்படி உருவானது என்பது தனக்கு இன்னும் குழப்பமாகவே இருக்கிறது'' என்று குறிப்பிட்டுள்ளார்.