ஆபாச பட விவகாரம் குறித்து மும்பை போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்த நடிகை ஷில்பா ஷெட்டி...

தனது கணவர் ஒரு நிரபராதி என பாலிவுட்டி பிரபல நடிகை ஷில்பா ஷெட்டி தெரிவித்ததாக மும்பை குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளார்.

ஆபாச பட விவகாரம் குறித்து மும்பை போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்த நடிகை ஷில்பா ஷெட்டி...

 பிரபல பாலிவுட் நடிகையான ஷில்பா ஷெட்டியின் கணருவரும், தொழிலதிபருமான ராஜ் குந்த்ரா, மும்பையில், ஆபாசப் படங்களைத் தயாரித்து, அதனை செல்போன் செயலி மூலம் விநியோகம் செய்தது தொடர்பாக மும்பை குற்றப்பிரிவு போலீசாரால் கடந்த 19-ஆம்  தேதி கைது செய்யப்பட்டார். இதனிடையே, நடிகை ஷில்பாவுக்கு இதில் சம்பந்தம் இருக்கிறதா என்பதை தெரிந்துகொள்ள குற்றப்பிரிவு போலீசார் ஜூகுவில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றனர்.

அவரிடம் தீவிர விசாரணை நடத்திய பிறகு வீட்டை சோதனை செய்து ஒரு லேப்டாப்பை பறிமுதல் செய்துள்ளனர். ராஜ் குந்த்ராவின் நிறுவனங்களில் ஷில்பா ஷெட்டி இயக்குனராக இருந்ததால் அவரிடம் விசாரணை நடத்தியதாக தெரிவித்த போலீசார், விசாரணையின் போது தனது கணவர் அப்பாவி என்றும் அவருக்கும் ஆபாச படத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் ஷில்பா ஷெட்டி கூறியதாக தெரிவித்துள்ளனர்.மேலும் ஆபாச இணையதளத்தை நிர்வாகித்து வந்ததது தனது கணவரின் உறவினர் என மும்பை போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.