ஏ.ஆர்.ரஹ்மானின் கோரிக்கைக்கு இசைஞானி இளையராஜா அளித்த பதில் என்ன?

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் கோரிக்கையை ஏற்ற இசைஞானி இளையராஜா பதில் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஏ.ஆர்.ரஹ்மானின் கோரிக்கைக்கு இசைஞானி இளையராஜா அளித்த பதில் என்ன?

‘துபாய் எக்ஸ்போ’ நிகழ்ச்சிக்கு பிறகு இளையராஜா, ஏ.ஆர்.ரகுமானின் பிர்தோஸ் ஸ்டூடியோவுக்கு சென்றிருந்தார்.

அப்போது, அவர்கள் இருவரும் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த ஏ.ஆர்.ரகுமான், மேஸ்ட்ரோ இளையராஜாவை பிர்தோஸ் ஸ்டூடியோவுக்கு வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி என்றும் எதிர்காலத்தில் தங்கள் ஸ்டூடியோவில் அவர் இசையமைப்பார் என நம்புகிறேன் என்றும் பதிவிட்டிருந்தார். 

இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலானது. இதனையடுத்து, ஏ.ஆர்.ரகுமானுக்கு பதிலளிக்கும் வகையில் ட்விட்டரில் இளையராஜா பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

அதில், ''கோரிக்கை ஏற்கப்பட்டது. விரைவில் இசையமைப்பேன்'' என்று குறிப்பிட்டுள்ளார். இது, இருவரின் ரசிகர்களையும் கொண்டாட வைத்துள்ளது.