இயக்குநர் அவதாரம் எடுத்த இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்..! முதல் படமே கேன்ஸ் சர்வதேசத் திரைப்பட விழாவில் திரையிடுவதாக தகவல்!

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இயக்கிய ‘லி மஸ்க்’ எனும் குறும்படம் கேன்ஸ் சர்வதேசத் திரைப்பட விழாவில் திரையிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் அவதாரம் எடுத்த இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்..!  முதல் படமே கேன்ஸ் சர்வதேசத் திரைப்பட விழாவில் திரையிடுவதாக தகவல்!

இந்திய மொழி சினிமாக்களில் கொடிக்கட்டி பறந்துவரும் ஆஸ்கர் விருது நாயகன் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் “ஸ்லாம்டாக் மில்லியனர்” திரைப்படத்திற்காக ஆஸ்கார் விருதை தட்டிச் சென்றார். இசை மட்டுமில்லாது கடந்த 2020 - ல் இந்தியில் வெளியான “அட்கன் சாட்சன்“ எனும் இசை தொடர்பான திரைப்படத்தைத் தயாரித்தன் மூலம் தயாரிப்பாளர் அவதாரத்தையும் எடுத்திருந்தார். அதற்குப் பிறகு “99 சாங்ஸ்” எனும் திரைப்படத்திற்கு திரைக்கதையையும் எழுதியிருந்தார்.

இந்நிலையில் தற்போது புதிதாக இயக்குநர் அவதாரத்தையும் எடுத்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் தனது மனைவி கூறிய ஒன்லைன் கதையை அடிப்படையாக வைத்து 36 நிமிடங்கள் ஓடக்கூடிய “லி மஸ்க்” எனும் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்தத் திரைப்படம் ஒரு பெண் தன்னை நாடிவரும் ஆண்களை அவர்களின் வாசனை திரவியத்தை வைத்தே அடையாளம் கண்டுகொள்வது போன்ற திரைக்கதையைக் கொண்டுள்ளது என்றும் இதற்கான முழுக்கதையை குராச்சி ஃபீனிக்ஸ் என்பவர் எழுதியுள்ளதாகவும் நோரா அர்னிடேசர் மற்றும் கை பர்நெட் ஆகியோர் இதில் நடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

 ”லி மஸ்க்” என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படத்தின் பெயர்க்காரணம் என்னவென்றால் ஏ.ஆர்.ரஹ்மானும் அவரது மனைவி சாய்ராவும் லி மஸ்க் எனப்படும் வாசனை திரவியத்தை அதிகம் விரும்புவதால் இந்தப்பெயர் வைக்கப்படுள்ளதாக தெரிகிறது. இந்தப்படத்தை பிரான்ஸ் நாட்டில் வரும் மே 17 - 28 வரை நடைபெறவுள்ள அதிமுக்கியத்துவம் வாய்ந்த கேன்ஸின் 75 ஆவது சர்வதேசத் திரைப்பட விழாவில் ”லி மஸ்க்” திரைப்படம் திரையிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏ.ஆர் ரஹ்மானே இசையமைத்து இயக்கிய இந்தப்படத்திற்கு தமிழ் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது.