இசையின் ஆஸ்கார் நாயகன் வெளியிட்ட - மகளின் திருமண புகைப்படம்!!
ஏ.ஆர்.ரஹ்மான் மகள் கதிஜா ரஹ்மான் மற்றும் ரியாசுதீன் ஷேக் ஆகியோரின் திருமணம் நேற்று சென்னையில் எளிமையாக நடைபெற்றது.

ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜா ரஹ்மானுக்கும், ஆடியோ இன்ஜியரான ரியாசுதீன் ஷேக்கிற்கும் கடந்து ஆண்டு டிசம்பர் மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்த நிலையில் நெருங்கிய சொந்தங்கள் நட்பு வட்டாரங்கள் என அனைவருடன் சென்னையில் நேற்று திருமணமானது எளிமையாக நடைபெற்று முடிந்தது.
திருமணத்திற்கு பின்னதாக மகள் மற்றும் தனது மருமகன் குடும்பத்தாருடன் இணைந்தவாரு எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான். புதுமண தம்பதியை இறைவன் ஆசிர்வதிக்கட்டும் எனவும் அவரது அனைவரின் அன்பிற்கும் முன்கூட்டிக்யே நன்றிகள் எனவும் குறிப்பிட்டு இருக்கிறார்.
தாயார் புகைப்படத்துடன் அவர் பகிர்ந்திருந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி புதுமண தம்பதிக்கு அனைவரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.