”மிஸ் தமிழ்நாடு” அழகி போட்டியில் அசத்திய கட்டடத் தொழிலாளி மகள்.. அதுவும் பகுதி நேர வேலை பார்த்து..!

டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள மிஸ் இந்தியா போட்டியில் பங்கேற்கவுள்ளார்..!

”மிஸ் தமிழ்நாடு” அழகி போட்டியில் அசத்திய கட்டடத் தொழிலாளி மகள்.. அதுவும் பகுதி நேர வேலை பார்த்து..!

ஒரு கட்டடத் தொழிலாளியின் மகள் அழகிப் போட்டியில் பட்டம் வெல்ல முடியும் என்று ஒருவர் கூறினால், அவரை நாம் ஏளனத்துடன் தான் பார்ப்போம். ஆனால் அதுவே உண்மையானால். ஆம் செங்கல்பட்டை சேர்ந்த கட்டடத் தொழிலாளியின் மகள் மிஸ் தமிழ்நாடு பட்டத்தை வென்று அசத்தியுள்ளார். 

மாடலிங்:

மாடலிங் என்பதே பொருளாதரத்தில் முன்னேற்றம் அடைந்தவர்கள், நடிகைகளால் மட்டுமே செய்ய முடியும் என்ற ஒரு மாய பிம்பம் இருந்தது. அது போக மாடலிங்கில் ஒரு பெண் சென்று விட்டால் அவர்களது நடத்தை மோசமாகத் தான் இருக்கும் என்ற பிம்பமும் இங்கு பரப்பப்பட்டு வந்தது. இவற்றை எல்லாம் மாற்றி மாடலிங் என்பது ஒரு பொதுவான துறை அதில் யார் வேண்டுமானாலும் சாதித்து காட்டலாம் என இன்றைய இளைஞர்கள் அதிகம் மாடலிங்கில் கால் பதித்து வருகின்றனர். 

ரட்சயா:

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தை சேர்ந்த கட்டடத் தொழிலாளி மனோகர். இவரது மகள் 20 வயதான ரட்சயா. VISCOM படித்து வரும் ரட்சயாவுக்கு, சிறுவயது முதலே மாடலிங்கில் ஆர்வம் இருந்துள்ளது. எப்படியேனும் இந்த துறையில் சாதித்தே ஆக வேண்டும் என்பதற்கான அதற்காக உழைத்திருக்கிறார். 

பகுதி நேர வேலை:

தந்தையின் தினக்கூலி வருமானத்தை வைத்து மட்டும் தனது இலக்கை அடைய முடியாது என தெரிந்து கொண்டவர், கல்லூரி நேரம் போக மீதி நேரத்தில் பகுதி நேர வேலைகளையும் செய்து வருமானம் ஈட்டி வந்துள்ளார். அதனைக் கொண்டு தனது நடை, உடை போன்றவற்றில் கவனம் செலுத்தி திறமையை வளர்ந்துக் கொண்டுள்ளார். 

மாவட்ட அளவிலான அழகிப் போட்டி:

STAR INDIA AWARDS நடத்திய மாவட்ட அளவிலான அழகிப் போட்டியில் தேர்வாகி, பின்னர் மாநில அளவிலான போட்டியில் கலந்து கொண்டார். கடந்த 18-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை அழகிப் போட்டி நடைபெற்றது. இதில் சுமார் ஆயிரக்கணக்கான அழகிகள் கண்டு கொண்டனர். 

மிஸ் தமிழ்நாடு:

இந்தப் போட்டியில் கலந்து கொண்ட ரட்சயா, ”மிஸ் தமிழ்நாடு” என்ற பட்டத்தை வென்று அசத்தினார். இதன் மூலம் வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள மிஸ் இந்தியா அழகி போட்டியில் ரட்சயா கலந்து கொள்ளவுள்ளார். இதற்கு முன்னதாக கடந்த 2018-ம் ஆண்டு நடந்த ”மோனோ ஆக்டிங்” நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்று, அரசு சார்பில் மலேசியா அழைத்து செல்லப்பட்டு கௌரவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.