கணவரை விவாகரத்து செய்கிறேன்.. வருத்தம் தெரிவிப்பதற்கு பதிலாக வாழ்த்து தெரிவியுங்கள்.. நடிகை மியா கலிஃபா

நடிகை மியா கலிஃபா, தனது கணவர் ராபர்ட் சாண்ட்பர்க்கை விவாகரத்து செய்ய இருப்பதாக அறிவித்து இருக்கிறார்.
கணவரை விவாகரத்து செய்கிறேன்.. வருத்தம் தெரிவிப்பதற்கு பதிலாக வாழ்த்து தெரிவியுங்கள்.. நடிகை மியா கலிஃபா
Published on
Updated on
1 min read

ஆபாச திரைப்படங்களில் நடித்ததன் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானவர் மியா கலிஃபா. இவர் கடந்த 2011ம் ஆண்டு தனது பள்ளி காதலனை திருமணம் செய்து கொண்டார். பின்னர் மன கசப்பு காரணமாக 2016ம் ஆண்டு இருவரும் பிரிந்தனர்.

இதையடுத்து ஸ்வீடனை சேர்ந்த சமையல் கலைஞர் ராபர்ட் சாண்ட்பர்க்குடன் தனக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளதாக கடந்த 2020 மார்ச் மாதம் அறிவித்திருந்தார்மியா கலிஃபா. 

கொரோனா  பரவல் காரணமாக இருவரும் எளிமையான முறையில் வீட்டிலே திருமணம் செய்து கொண்டதாக அறிவித்தனர். இந்நிலையில்,  1 வருடத்திற்கு மேலாக எங்களது திருமண உறவை தக்கவைத்துக் கொள்ள முடியவில்லை எனவும், இருவரும் பிரிந்து வெவ்வேறு பாதையில் செல்ல திட்டமிட்டுள்ளதாக மியா அறிவித்துள்ளார்.

நாங்கள் இருவரும் திருமண உறவில் இருந்து பிரிந்தாலும், எங்களது நட்பை தொடர முடிவு செய்துள்ளோம் என்று தெரிவித்துள்ளார். மேலும், விவாகரத்து பெறுபவர்களுக்கு வருத்தம் தெரிவிப்பதற்கு பதிலாக வாழ்த்து தெரிவியுங்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com