மறைந்த நடிகர் விவேக் இல்லம் உள்ள சாலைக்கு சின்ன கலைவாணர் விவேக் சாலை என பெயர் வைக்க வேண்டும் - தமிழக முதலமைச்சருக்கு கோரிக்கை

மறைந்த நடிகர் விவேக் இல்லம் உள்ள சாலைக்கு சின்ன கலைவாணர் விவேக் சாலை என பெயர் வைக்க வேண்டும் என தமிழக முதலமைச்சருக்கு விவேக் பசுமை கலாம் அமைப்பு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

மறைந்த நடிகர் விவேக் இல்லம் உள்ள சாலைக்கு சின்ன கலைவாணர் விவேக் சாலை என பெயர் வைக்க வேண்டும் - தமிழக முதலமைச்சருக்கு கோரிக்கை

மறைந்த திரைப்பட நடிகர் விவேக்கின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் விவேக் பசுமை கலாம் அமைப்பு சார்பில் மரம் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் நடிகர் சங்க துணைத்தலைவரும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைவருமான பூச்சி முருகன், ஐ.பி.எஸ் அதிகாரி அரவிந்தன், நடிகர் பாபி சிம்ஹா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மைதானத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்தை திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் மைதானத்தில் மரக்கன்றுகள் நட்டு வைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் பேசிய பூச்சி முருகன், விவேக்  இல்லம் உள்ள சாலைக்கு சின்ன கலைவாணர் விவேக் என பெயர் வைக்க வேண்டும் என்ற கோரிக்கை தமிழக அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் எனத் தெரிவித்தார்.